2024-ம் ஆண்டில் பூமி பூஜை போட ஏற்ற வாஸ்துநாட்கள்? – எந்த மாதத்தில் எந்தெந்த நாட்கள் உகந்தவை?

ஒரு வீட்டில் எந்த தெய்வங்கள் நிறைந்திருந்தாலும் மிக முக்கியமானதொரு சக்தியாகவும் அந்த வீட்டை கோலோச்சுபவராகவும் வாஸ்து பகவான் திகழ்கிறார். வாஸ்து பகவான், வாஸ்து புருஷன் என்றெல்லாம் வாஸ்து பகவானை விவரிக்கிறது வஸ்து சாஸ்திரம். வாஸ்து பகவானுக்கு என்று ஒரு நாள் உள்ளது. இந்த நாளில், இல்லத்தை தூய்மையாக்கி, வாஸ்து பகவானை வழிபடுவது மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஒரு வருடத்தில் எட்டு வாஸ்து நாட்கள் மட்டுமே வரும். அந்த எட்டு நாள்களிலும் வாஸ்து புருஷன் ஒன்றரை மணிநேரம்தான் கண் விழித்திருப்பார். பிறகு மீண்டும் தூங்கச் சென்றுவிடுவார். இந்த பதிவில் சில முக்கியமான வீட்டுக்கான வாஸ்து குறிப்புகளை பற்றி தெரிந்துக் கொள்ளலாம்…

வீட்டின் வாசல் சுத்தமாக இருத்தல் நல்லது

சுத்தமான வாசல் உங்கள் வீட்டில் இருந்து எதிர்மறை ஆற்றல்களை வெளியேற்றிவிடும். எனவே, உங்கள் வாசல் ஒழுங்காக சுத்தம் செய்யப்படுவதை உறுதி செய்யவும். முடிந்தால் அதில் அழகாக கோலங்கள் போட்டு லட்சுமி தேவியை வரவேற்கலாம்.

வீட்டில் மணி ஓசை கேட்டால் நல்லது

வீட்டினுள் காற்றில் அசையும் மணிகளை கட்டி வைப்பது நல்லது. அது காற்று வீசும் போது மிகவும் மென்மையான இசைகளை ஏற்படுத்தும். இது வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றலை வளாகத்திலிருந்து வெளியேற்றுகிறது. டிங்கிங் மணி ஓசைகள் எதிர்மறை ஆற்றலை அழிக்க உதவுகிறது மற்றும் நேர்மறையான ஆற்றல் அதிகரித்து வீட்டில் மகிழ்ச்சி சுபகாரியம் ஆகியவை நடக்க வழிவகுக்கும்.

வீட்டில் கல் உப்பு இருப்பது நல்லது

கல் உப்பு ஒரு மருந்து என்று அறியப்படுகிறது. எதிர்மறை சக்தியை அழிக்க உங்கள் வீட்டின் ஒவ்வொரு மூலையிலும் கல் உப்பு உள்ள ஒரு கிண்ணத்தை வைத்துக் கொள்ளுங்கள். அது போல தண்ணீரில் உள்ள எலுமிச்சை உங்கள் வீட்டிலிருந்து எதிர்மறையான ஆற்றலைக் அழித்து நேர்மறை ஆற்றலை தருகிறது. அதனால் ஒரு குடுவையில் தண்ணீர் நிரப்பி ஒரு எலும்பிச்சை பழத்தை போட்டு வையுங்கள்.

தினமும் விளக்கு ஏற்றுதல்

ஒவ்வொரு காலையிலும் மாலையிலும் வீட்டில் விளக்குகள் மற்றும் மெழுகுவர்த்திகளை ஏற்றி வைத்தல் நல்லது. இந்த விளக்கு ஏற்றும் முறை, வீட்டிலிருந்து எதிர்மறையான எரிசக்திகளை அகற்றிவிடும். அத்துடன் வீட்டின் வெளிபுறத்தில் கண்ணாடியை மாற்றி வைப்பது நல்லது. அதுவும் எதிர்மறை ஆற்றலை வெளியேற்றும்.

2024ஆம் ஆண்டில் பூமி பூஜை போட சரியான வாஸ்துநாள் எந்த மாதத்தில் வருகிறது என்பதை பற்றி தெரிந்துக் கொள்ளலாம்.

எண் ஆங்கில தேதி, கிழமை தமிழ் மாதம் சுபமுகூர்த்த நேரம்
1. ஜனவரி – 26 வெள்ளி (தை மாதம் வாஸ்து நாள் 2024) தை 12 காலை 10.41 முதல் 11.17 வரை
2. மார்ச் – 05 செவ்வாய் (மாசி மாதம் வாஸ்து நாள் 2024) மாசி 22 காலை 10.32 முதல் 11.08 வரை
3. ஏப்ரல் – 23 செவ்வாய் (சித்திரை மாதம் வாஸ்து நாள் 2024) சித்திரை 10 காலை 08.54 முதல் 09.30 வரை
4. ஜூன் – 04 செவ்வாய் ( வைகாசி மாதம் வாஸ்து நாள் 2024) வைகாசி 22 காலை 09.58 முதல் 10.34 வரை
5. ஜூலை – 27 சனி( ஆடி மாதம் வாஸ்து நாள் 2024) ஆடி 11 காலை 07.44 முதல் 08.20 வரை
6. ஆகஸ்ட் – 22 வியாழன் ( ஆவணி மாதம் வாஸ்து நாள் 2024) ஆவணி 06 காலை 07.23 முதல் 07.59 வரை
7. அக்டோபர் – 27 ஞாயிறு (ஐப்பசி மாதம் வாஸ்து நாள் 2024) ஐப்பசி 10 காலை 07.44 முதல் 08.20 வரை
8. நவம்பர் – 23 சனி ( கார்த்திகை மாதம் வாஸ்து நாள் 2024 ) கார்த்திகை 08 காலை 11.29 முதல் பகல் 12.05 வரை

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *