Daily Rasi Palan | இன்றைய ராசி பலன் – மார்ச் 10, 2024 – ஞாயிற்றுக்கிழமை
மேஷம் :
காதல் வாழ்க்கை எதிர்பாராத ரொமான்ஸ் நிறைந்ததாக இருக்கும். எதையும் பாசிட்டிவாக எடுத்துக் கொள்ளும் உங்களது நடத்தை வேலையில் உங்களுக்கு பலமாக அமையும். புதிய முதலீட்டு வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளுங்கள். உங்களுடைய கடுமையான உழைப்பிற்கான பலனை பெறுவீர்கள்.
ரிஷபம் :
இன்று உங்கள் வாழ்க்கை துணையுடன் ஒரு சில ரொமான்டிக்கான தருணங்கள் உருவாகலாம். உங்கள் திறன்களில் கவனம் செலுத்தி அதனை மேம்படுத்துவது வேலையில் உங்களுக்கு உதவியாக இருக்கும். செலவு செய்யும் பொழுது எச்சரிக்கையாக இருக்கவும். நெருங்கிய நண்பர்களுடன் நேரத்தை செலவழிப்பீர்கள்.
மிதுனம் :
உங்களுடைய அன்பை வெளிப்படுத்துவதற்கான சரியான நாள் இது. எதையும் எளிதில் புரிந்து கொள்ளும் தன்மை வேலையில் வெற்றியடைய உதவும். உங்கள் பொருளாதார நிலையில் கவனம் செலுத்துவது அவசியம். உங்களை எப்பொழுதும் உற்சாகமாக வைத்திருக்கக்கூடிய நண்பர்களை உங்களுடன் வைத்துக் கொள்ளுங்கள்.
கடகம் :
காதல் வாழ்க்கையில் இன்று புரிதல் அதிகரிக்கும். உள்ளுணர்வு சம்பந்தப்பட்ட உங்களது அணுகுமுறை சரியான முடிவுகள் எடுப்பதற்கு உங்களுக்கு உதவும். பொருளாதார நிலைப்பாட்டை அடைவீர்கள். உங்கள் கடுமையான உழைப்புக்கேற்ற பலனை பெறுவீர்கள். பிடித்தமான நபர்களுடன் நேரத்தை செலவிடுவீர்கள்.
சிம்மம் :
காதல் வாழ்க்கை இன்று ஆச்சரியங்கள் நிறைந்ததாக இருக்கும். தலைமைத்துவ வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். நெருங்கிய நண்பர்களுடன் பயணம் செல்ல வாய்ப்புள்ளது. பொருளாதாரத்தில் கூடிய விரைவில் முன்னேற்றம் காணப்படும். கணக்கிடப்பட்ட முதலீடுகளில் கவனம் செலுத்துங்கள்.
கன்னி :
இன்று உங்கள் வாழ்க்கை துணையுடன் போதுமான அளவு நேரத்தை செலவிடுங்கள். வேலையில் சிறு சிறு தகவல்களில் கவனம் செலுத்துவது உங்களுக்கு வெற்றியை தேடி தரும். செலவுகளை கவனமாக செய்து வரக்கூடிய வாய்ப்புகளை புத்திசாலித்தனமாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். சுய பராமரிப்பு மற்றும் ஓய்வுக்கு நேரம் ஒதுக்கவும்.
துலாம் :
வேலையில் பிறருடன் சேர்ந்து பணி புரிவதன் மூலமாக உங்களுக்கு வெற்றி கிடைக்கும். குழுவாக சேர்ந்து வேலை செய்தால் இலக்குகளை எளிதில் அடைந்து விடலாம். நிலையான வளர்ச்சிக்கான வாய்ப்புகளை தேடுங்கள். உங்கள் ஆற்றலை மீட்டு எடுப்பதற்கு சிறு பயணத்தை திட்டமிடுங்கள்.
விருச்சிகம் :
இன்று வாழ்க்கை துணையுடன் மனம் திறந்து பேசுவீர்கள். உங்களுடைய விடாமுயற்சியும் கவனமும் வேலையில் வெற்றியை தேடி தரும். உங்கள் உள்ளுணர்வை நம்புங்கள். உங்கள் இலக்குகளை அடைய உதவும் வாய்ப்புகளை தவறாமல் பயன்படுத்திக் கொள்ளுங்கள். நண்பர்களுடன் வலுவான அடித்தளத்தை உருவாக்குங்கள்.
தனுசு :
உங்களுடைய உற்சாகமும் நேர்மறையான எண்ணமும் உங்களை சுற்றி இருப்பவர்களை ஊக்குவிக்கும். புதிய சவால்களை ஏற்று, சிறு சிறு ரிஸ்க் எடுக்க தயங்காதிர்கள். உங்களுடைய வருமானத்தை விரிவுபடுத்துவதற்கு வாய்ப்புகளை தேடுங்கள். நீண்ட கால லாபம் தரக்கூடிய முதலீடுகளில் ஈடுபடுங்கள்.
மகரம் :
உங்கள் வாழ்க்கை துணையுடன் உணர்வு பூர்வமான பந்தத்தை உருவாக்குவதற்கான வலுவான அடித்தளத்தில் கவனம் செலுத்துங்கள். நீண்ட கால இலக்குகளுக்கு முக்கியத்துவம் வழங்கவும். பொருளாதார திட்டமிடல் அவசியம். நிலையான வளர்ச்சிக்கான வாய்ப்புகளை கருத்தில் கொள்ளவும். பொறுமைக்கான பலனை கூடிய விரைவில் பெறுவீர்கள்.
கும்பம் :
மனதில் பட்டதை உங்கள் வாழ்க்கை துணையிடத்தில் வெளிப்படையாக பேசி விடுவது நல்லது. உங்கள் தனித்துவத்தை வெளிப்படுத்தக்கூடிய விஷயங்களில் ஈடுபடவும். சரியான திட்டமிடல் மூலமாக பொருளாதார நிலைப்பாட்டை அடையலாம். உங்கள் வருமானத்தை அதிகப்படுத்துவதற்கான வாய்ப்புகளை தேடி கண்டுபிடிங்கள்.
மீனம் :
உங்களுடைய உணர்வுகளை வாழ்க்கை துணையிடம் வெளிப்படுத்துவதன் மூலமாக உங்கள் இருவருக்கும் இடையேயான பந்தம் வலுவாகும். வேலையில் உங்களுடைய உள்ளுணர்வு உங்களை வெற்றியை நோக்கி அழைத்துச் செல்லும். பொருளாதார விஷயங்களில் கவனம் அவசியம். உங்களுடைய திறன்கள் மீது நம்பிக்கை கொள்ளுங்கள். உங்களுக்கு ஓய்வு தரக்கூடிய செயல்பாடுகளில் ஈடுபடவும்.