2024 பிப்ரவரி மாத வாகன விற்பனையில் 33% வளர்ச்சி கண்ட டிவிஎஸ் மோட்டார்…

2024-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் மட்டும் 3,68,424 வாகனங்களை விற்றுள்ளதாக டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் அறிவித்துள்ளது. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 33 சதவிகித வளர்ச்சியாகும்.

2023-ம் ஆண்டு இதே பிப்ரவரி மாதத்தில் 2,76,150 வாகனங்களை டிவிஎஸ் நிறுவனம் விற்பனை செய்திருந்தது. அதே போல் எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனையும் சென்ற ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு அதிகரித்துள்ளது. 2023-ல் 15,522 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனையாகி இருந்த நிலையில், இந்த வருட பிப்ரவரி மாதம் 17,959 எலெக்ட்ரிக் பைக்குகள் விற்பனையாகி உள்ளன.

டூ-வீலர் விற்பனையை பொறுத்தவரை, 2023-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2,6,026-ஆக இருந்த விற்பனை எண்ணிக்கை, இந்த ஆண்டு பிப்ரவரியில் 3,57,810-ஆக அதிகரித்துள்ளது. இது 34 சதவிகித வளர்ச்சி ஆகும். உள்நாட்டு டூ-வீலர் விற்பனையை பார்த்தோமென்றால் கடந்த ஆண்டை விட 21 சதவிகிதம் வளர்ச்சியடைந்து 2024 பிப்ரவரியில் மட்டும் 2,67,502 டூ-வீலர்கள் விற்பனையாகியுள்ளன.

மோட்டார் சைக்கிள்களை எடுத்துக்கொண்டால் 2024-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 1,84,023 என்ற எண்ணிகையில் விற்பனையாகியிருக்கிறது. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 46 சதவிகித வளர்ச்சியாகும். ஸ்கூட்டர் விற்பனையை பொறுத்தவரை 2023-ம் ஆண்டு 1,04,825-ஆக இருந்த விற்பனை எண்ணிக்கை, இந்த ஆண்டு பிப்ரவரியில் 1,32,152-ஆக உயர்ந்துள்ளது. இது 26 சதவிகித வளர்ச்சியாகும்.

டிவிஎஸ் நிறுவனத்தின் ஒட்டுமொத்த ஏற்றுமதியை பொறுத்தவரை, 85 சதவிகிதம் வளர்ச்சி அடைந்து 2024-ம் ஆண்டு பிப்ரவரியில் 98,856 வாகனங்களை ஏற்றுமதி செய்துள்ளார்கள். கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 53,405 வாகன்ங்களை ஏற்றுமதி செய்திருந்தார்கள். இதில் டூ-வீலர் ஏற்றுமதி 98 சதவிகித வளர்ச்சியும், மூன்று சக்கர வாகனத்தின் ஏற்றுமதி 16 சதவிகிதமும் வளர்ச்சி கண்டுள்ளது.

வாகனத்தின் வடிவமைப்பு, வளர்ச்சி மற்றும் தங்களது அனைத்து தயாரிப்புகளுக்கும் எதிர்கால தொழில்நுட்பத்தை புகுத்தவும் ரூ.5,000 கோடியை முதலீடு செய்யவுள்ளது டிவிஎஸ் நிறுவனம். இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனப் பிரிவில் சிறந்த பங்களிப்பை அளித்து வரும் டிவிஎஸ் நிறுவனம், இரண்டு பிரிவுகளிலும் இந்த தொகையை முதலீடு செய்யவுள்ளது.

”எங்கள் நிறுவனத்தின் ஆதார அம்சமே பொறியியல் மற்றும் ஆய்வு வளர்ச்சிதான். டிவிஎஸ் வாகனத்தின் நேர்த்தியான வடிவமைப்பு மற்றும் வளர்ச்சி திறனிற்கு 2,000-க்கும் மேற்பட பொறியியலாளர்கள் பின்புலமாக இருக்கிறார்கள். எங்கள் வாடிக்கையாளர்களின் வாழ்க்கை தரத்தை அதிகப்படுத்தி, எதிர்கால போக்குவரத்தை தொழில்நுட்ப உதவியோடு மாற்றியமைப்பதே எங்களுடைய நோக்கம்” என டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் சுதர்ஸன் வேனு கூறுயுள்ளார்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *