லட்சங்களில் கொட்டிய பணம்! மாட்டு பண்ணை வைத்து கோடீஸ்வரரான இளைஞர்! வருமானம் இத்தனை கோடியா?
உத்தரபிரதேசத்தின் குக்கிராமத்தில் பிறந்த தர்லாப் ராவத், இன்று இந்தியாவின் பால் பொருட்கள் உற்பத்தி மற்றும் விற்பனையில் தனி இடம் பிடித்துள்ளார்.
லட்சக்கணக்கில் சம்பளம்
உத்தரபிரதேசத்தில் பாரம்பரிய விவசாய குடும்பத்தில் பிறந்த தர்லாப் ராவத், பல போராட்டங்களுக்கு மத்தியில் டெல்லி கல்லூரியில் டிப்ளமோ இன் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிப்பை முடித்தார்.
இதையடுத்து மாதம் 6 ரூபாய்க்கு மகேந்திரா போன்ற வாகன நிறுவனங்களில் பணிபுரிந்த தர்லாப் ராவத், 12 ஆண்டுகளிலேயே ஆண்டுக்கு 15 லட்சம் ரூபாய் என்ற சம்பளம் என்ற நிலைக்கு உயர்ந்தார்.
வேலையை விட்டு விட்டு மாட்டு பண்ணை
ஒருநாள் திடீரென தனது லட்சம் ரூபாய் வேலையை விட்டு விட்டு, பால் மற்றும் பால் சம்பந்தப்பட்ட பொருட்களை உற்பத்தி செய்யும் மாட்டு பண்ணை ஒன்றை வைத்தார்.
தனது அம்மாவை நினைவு கூறும் விதமாக மாட்டு பண்ணை நிறுவனத்துக்கு பரோஸி என பெயர் வைத்தார். (பரோஸி என்றால் பானையில் பாலை சூடு செய்வது என்பது பொருள்).
50 மாடுகளை கொண்டு தொழிலை தொடங்கிய தர்லாப் ராவத், பால், நெய், வெண்ணெய் போன்ற பொருட்களை விற்பனை செய்து படிப்படியாக உயர்ந்தார்.
E-commerce வளர்ச்சியை நன்கு புரிந்து கொண்ட தர்லாப் ராவத், பரோஸிக்கு என்று தனியாக இணையதளம் உருவாக்கினார்.
அத்துடன் அமேசான், பிளிப்கார்ட் போன்ற தளத்திலும் பரோஸி பொருட்கள் வாடிக்கையாளர்களுக்கு கிடைப்பதை உறுதி செய்தார்.
இதனால் விற்பனை பல மடங்கு அதிகரித்தது, இதையடுத்து பரோஸியின் பால் பொருட்கள் விற்பனை அமெரிக்கா வரை ஏற்றுமதி செய்யப்படும் அளவிற்கு உயர்ந்தது.
அத்துடன் பரோஸியின் ஓராண்டு வருமானம் மட்டும் சுமார் 8 கோடி ரூபாய்க்கு உயர்ந்தது.