விஜயகாந்த் இறுதி யாத்திரை; இந்த நடிகர்கள் ஆப்சென்ட்: காரணம் என்ன?
நடிகர் விஜயகாந்த் உடல்நல குறைவு காரணமாக சென்னை மியாட் மருத்துவமனையில் வியாழக்கிழமை காலை காலமானார். அவரது உடலுக்கு நடிகர்கள், அரசியல் பிரமுகர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி உள்ளனர்.
தூத்துக்குடியில் வேட்டையன் படப்பிடிப்பில் இருந்த நடிகர் ரஜினிகாந்த் அந்த படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு சென்னை திரும்பினார். தொடர்ந்து அவர் விஜயகாந்தின் உடலுக்கு ரோஜா மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
உலக நாயகன் கமல்ஹாசனும் அஞ்சலி செலுத்தியுள்ளார். இதே போல் நடிகர்கள் விஜய், பிரபு உள்ளிட்ட பலரும் அஞ்சலி செலுத்தியுள்ளனர். இந்த நிலையில், நடிகர் அஜித்குமார், சூர்யா மற்றும் விஷால் உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது.
இவர்கள் வெளிநாட்டில் படப்பிடிப்பில் இருப்பதால் நேரில் அஞ்சலி செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நடிகர் விஜயகாந்தின் பூத உடல் வியாழக்கிழமை சென்னை தீவு திடலில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
தொடர்ந்து அவரது உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்திய நிலையில், வாகனத்தில் அவரது பூத உடல் எடுத்து வரப்பட்டு கோயம்பேடு தேமுதிக அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்படுகிறது. அவரது உடல் வைக்கப்படும் சந்தன பேழையில், புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் தேமுதிக நிறுவனர் என பொறிக்கப்பட்டுள்ளது.