வெறும் ரூ.3000 விலையில் AC வாங்கலாம்! என்னென்ன அம்சங்கள்?
கோடைகாலம் நெருங்கிய வேளையில் மிகக்குறைந்த விலையில் வாங்கக்கூடிய AC பற்றிய தகவலை இந்த பதிவில் பார்க்கலாம்.
கோடை காலத்தில் அனைவரும் குளிர்ச்சியான இடத்தில் இருப்பதற்கே ஆசை படுவார்கள். அதற்கு நகரங்களில் வசிப்பவர்கள் முதலில் AC வாங்க வேண்டும் என்று தான் நினைப்பார்கள்.
அதே சமயம் குறைந்த விலையில் இருக்க வேண்டும் என்பது தான் அனைவரது எதிர்பார்ப்பாகவும் இருக்கும்.
தற்போதைய காலத்தில் AC வாங்க வேண்டும் என்றால் குறைந்தபட்சம் ரூ.35,000 -ஆவது வேண்டும். ஆனால், விலை குறைவாக வாங்க வேண்டும் என்றால் அதற்கு நாம் போர்ட்டபிள் ஏசியை (Portable AC) தான் வாங்க வேண்டும்.
Portable AC
விலை குறைவாக உள்ள இந்த Portable AC -யை நாம் சிறிய அறை, வீடு, அலுவலகம் என எந்த இடத்தில் வேண்டுமானாலும் பய்னபடுத்திக் கொள்ளலாம்.
ஸ்பீட் லிமிட் (Speed limit) கொண்ட இந்த Portable AC ஓன்லைன் தளங்களில் ரூ.3000 முதல் விற்பனைக்கு கிடைக்கிறது.
ஆனால், இந்த Portable AC வழக்கமாக நாம் பயன்படுத்தும் ஏசியை போல இருக்காது. இந்த ஏசி ஒரு இது ஒரு வாட்டர் டெங் கூலர் (Water Tank Cooler) ஆகும். அரை லிட்டர் தண்ணீர் அல்லது ஐஸ் கட்டிகளால் குளிர்ந்த காற்றை நமக்கு கொடுக்கிறது.
ஃபேனின் வேகத்தை பொருத்து 3 மணி முதல் 5 மணி நேரங்கள் வரை காற்றை கொடுக்கிறது. அதோடு, 7 வகையான வண்ண விளக்குகளையும் கொண்டுள்ளது.