இனி கர்நாடகாவில் பைக் டாக்சி சேவைக்கு தடை?
ஓலா, உபர் போன்ற டாக்ஸி சேவை செயலிகள் மூலமாக பயணிகளுக்கான வாடகை வாகனங்கள் செயல்பாடுகள் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த சில வருடங்களாக இவற்றில் பைக் மூலம் டாக்ஸி சேவை வழங்குவது நடந்து வருகிறது. உரிய பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி மட்டுமே டாக்ஸி சேவைகளை தொடர வேண்டும் என்று அரசு உத்தரவிட்டு உள்ளது.இருப்பினும், பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் மோட்டார், வாகன சட்டத்துக்கு புறம்பாக டாக்ஸி செயலிகள் செயல்படுவது, டாக்ஸி ஓட்டுநர்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு இடையில் ஏற்படும் மோதல்கள் போன்ற பல்வேறு காரணங்கள் காரணமாகவும் கர்நாடக அரசு ஆனது பைக் டாக்ஸி சேவைக்கு தற்போது தடை விதித்துள்ளது. கர்நாடகா அரசின் உத்தரவு டாக்ஸி சேவை ஓட்டுநர்கள் மத்தியில் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெண்களுக்கு இந்த திட்டத்தால் பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதால் இந்த திட்டத்தை ரத்து செய்வதாக தற்போது அறிவித்துள்ளது.பைக் டாக்ஸி சேவைகள் என்பது பெண்களுக்கு பாதுகாப்பில்லாத ஒரு விஷயமாக இருக்கிறது. நீண்ட தூரம் பெண்கள் மட்டும் தனியாக தெரியாத நபருடன் பைக்கில் செல்லும்போது அவர்களுக்கு பாதுகாப்பில்லாத சூழ்நிலை ஏற்படுகிறது. இதனால் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகமா நடக்கிறது.இதனால் கர்நாடக மாநிலத்தில் எலெக்ட்ரிக் பைக்குகளில் இனி யாரும் பைக் டாக்ஸி சேவைகளை நடத்தக் கூடாது எனவும் தெரிவித்துள்ளது.