ரேஷன் கடைகளுக்கு பறந்த உத்தரவு..! இனி ஒருத்தரும் ஏமாற்ற முடியாது.!
ரேஷன் கார்டை வைத்து ரேஷன் கடைகளில் இலவசமாகவும் மலிவு விலையிலும் அரிசி, பருப்பு, எண்ணெய், சர்க்கரை, கோதுமை போன்ற உணவுப் பொருட்களை நீங்கள் வாங்கலாம். பொங்கல் பரிசு தொகுப்பு, மகளிர் உரிமைத் தொகை போன்ற நலத்திட்ட உதவிகளும் ரேஷன் கார்டு மூலமாக வழங்கப்படுகிறது.
இந்நிலையில் ரேஷன் கடைகளில் பொருட்கள் சரியாக கிடைப்பதில்லை எனவும், மக்கள் அலைக்கழிக்கப்படுவதாகவும் புகார் எழுந்த வண்ணம் இருக்கிறது. மேலும் அரசு இது குறித்து நடவடிக்கை எடுத்தும் பலனில்லை. அதனால் தற்போது புதிய நடவடிக்கை ஒன்றை அரசு எடுத்துள்ளது.
அதாவது பொதுமக்களுக்கு ஏதாவது புகார் இருந்தால் அதனை தெரிவிக்க இலவச எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. வெயில் காலம் என்பதால் மக்கள் அலைக்கழிக்கப்பட கூடாது எனவும், அரிசி உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் வழங்க வேண்டும் என்றும், அதற்கேற்றவாறு, கடைகளுக்கு முழு அளவில் பொருட்களை அனுப்புமாறும் நுகர்பொருள் வாணிப கழகத்திடம் 4 நாட்களுக்கு முன்புகூட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்க நேரில் வர முடியாத முதியவர்கள், உடல் ஊனமுற்றோர் போன்றோருக்கு அரசு தரப்பில் ரேஷன் அங்கீகாரச் சான்று வழங்கப்படுகிறது. ரேஷன் கடைகளில் எப்போதுமே கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் அவர்கள் நீண்ட நேரம் காத்துக் கிடக்க வேண்டியிருக்கும். எனவே அவர்களுக்கு இந்த அங்கீகாரச் சான்று பெரும் உதவியாக இருக்கிறது.
ஹெல்ப்லைன் நம்பர்கள் அதாவது இலவச உதவி மைய எண்களை அரசு வழங்கியுள்ளது. இது மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடுகிறது. தமிழகத்தில் ரேஷன் தொடர்பான புகார்களை 1800 425 5901 என்ற எண்ணுக்கு தொடர்புக்கொண்டு தெரிவிக்கலாம். அதேபோல் ஆன்லைனிலும் உங்கள் புகார்களை பதிவு செய்யலாம். www.tnpds.gov.in என்ற உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் புகாரை பதிவு செய்யலாம். இதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் உதவி மைய எண் 1800 425 5901 தொடர்புக்கொண்டு உங்கள் சந்தேகங்களை தீர்த்துக்கொள்ளலாம்.