இது தெரியுமா ? அமாவாசை அன்று அசைவ உணவை தவிர்ப்பது ஏன்?

நம் கலாச்சாரத்தில் கோவிலுக்கு செல்லும் போது, இறை வழிபாட்டினை செய்யும் போது மற்றும் முக்கிய விரத நாட்கள், மாதங்கள், அமாவாசை, பெளர்ணமி போன்ற நாட்களில் அசைவம் உண்பதை தவிர்ப்பார்கள்.

ஒரு சிலர் முழுமையான சைவ உணவு பழக்கத்தை கடைப்பிடிக்கின்றனர். ஒரு சிலர் இது போன்ற முக்கிய நாட்களில் அசைவத்தை தவிர்க்கிறார்கள். எனில் ஏன் தவிர்க்க வேண்டும்? என்கிற கேள்வி இயல்பானது. கோவில் என்பது புனிதமானது அங்கே செல்கையில் சுத்திகரிக்கப்பட்ட ஆராவுடன் நாம் இருப்பது நன்று. அங்கிருக்கும் நேர்மறை ஆற்றலை நம் உடல் உள்வாங்கும் தன்மையுடன் இருத்தல் அவசியம்.

அறிவியல் ரீதியாக சொன்னால், அசைவ உணவுகளை உண்கிற போது அதை முழுமையாக செரித்து வெளியேற்ற நம் உடல் கிட்டதட்ட மூன்று நாட்கள் வரை எடுத்து கொள்கிறது. எனில் அசைவத்தின் தாக்கம் அதாவது அந்த மந்த தன்மை நம்ம் உடலில் மூன்று நாட்கள் வரை இருக்கும். ஆனால் காய்கறிகள் மற்றும் பழ வகைகள் என்பது மிக சில மணி நேரங்களிலேயே செரிக்க கூடியது. இதனால் உடல் சுறுசுறுப்புடன் இருப்பதுடன் நேர்மறை ஆற்றலை உள்வாங்கும் தன்மையுடன் இருக்கும்.

அமாவாசையில் ஒருவர் அசைவத்தை தவிர்ப்பது ஏன் என்றால், நிலவிற்கு மனித உடலின் மீதான தாக்கம் அதிகம். குறிப்பாக மனிதர்களின் செரிமான மண்டலம் மீத் நிலவிற்கு தாக்கம் அதிகம். எனவே அமாவாசையின் போது நிலவு இல்லாததால் அன்றைய நாளில் மனித உடலின் செரிமான இயக்கம் சற்று பலவீனமானதாக இருக்கும். எனவே தான் நம் மூத்தோர் இந்த நாளில் தவிர்க்க சொல்லியுள்ளனர். இதை போலவே ஏகாதசி, பெளர்ணமி போன்ற நாட்களில் நம் மக்கள் பெரும்பாலானோர் விரதம் இருப்பதை கண்டிருப்போம். இது உடலை சுத்திகரிக்கும் ஒரு முறையே ஆகும். எனவே இறை வழிபாடு, கோவிலுக்கு செல்லுதல் போன்ற ஆன்மீகம் சார்ந்த விஷயங்களில் ஈடுபடும் போது, மனதையும் உடலையும் அதற்கான தயார் நிலையில் வைத்திருத்தல் அவசியம். உடலை நேர்மறை ஆற்றலை உள்ளிக்கும் தன்மையுடன் வைத்திருக்க சாத்வீக உணவே சரியானது.

அமாவாசை என்பது சூரியனும் சந்திரனும் சந்திக்கும் ஒரு புள்ளி. அந்த நாளில் சூரியன், சந்திரன் ஆகியவற்றில் இருந்துவரும் அதிகமான ஈர்ப்புத் தன்மை காரணமாக நமது உடலின் செரிமானத்தில் ஒரு பாதிப்பை ஏற்படுத்துகிறது. செரிமானத்தன்மை அந்த நாளில் குறைப்பதால்தான் அமாவாசையன்று விரதம் மேற்கொள்வது நல்லது என்று நமது முன்னோர்கள் கண்டுள்ளார்கள். சும்மா விரதம் இரு என்றால் யாரும் இருக்க மாட்டார்கள் என்பதற்காகவே, உனது முன்னோர்களுக்காக விரதம் இரு, உனது வாழ்வில் இன்றைக்கு நீ அனுபவிக்கும் அனைத்தையும் பெற்றுத் தந்த அவர்களுக்காக விரதம் இரு என்று கூறிவிட்டனர். இப்படித்தான் அதனை ஒரு நன்றிக்கடன் செலுத்தும் நாளாக ஆக்கியுள்ளனர்

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *