நீரிழிவு நோயால் ஏற்படும் சோர்வை குணப்படுத்தும் சூப்பர் உணவுகள்
உலக அளவில் இந்நாட்களில் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. நமது வாழ்க்கை முறையும் ஆரோக்கியமற்ற உணவு முறையும் நீரிழிவு நோய்க்கு முக்கிய காரணங்களாக அமைகின்றன. ஒருமுறை ஒருவருக்கு நீரிழிவு நோய் வந்து விட்டால் அதை குணப்படுத்த முடியாத என்பது கசப்பான உண்மையாகும். ஆகையால் இது வராமல் காப்பதில் புத்திசாலித்தனம் உள்ளது.
நீரிழிவு நோயாளிகள் தங்கள் உணவில் அதிகப்படியான கவனம் செலுத்த வேண்டும். இவர்களால் பலவித உணவுகளை சாப்பிட முடியாது என்பதால் அடிக்கடி இவர்களுக்கு உடல் சோர்வு ஏற்படுகிறது. நீரிழிவு நோயாளிகளுக்கு பொதுவாக அதிகமாக பசி எடுக்கும். உணவு உட்கொண்ட பிறகும் சோர்வு இருந்து கொண்டே தான் இருக்கின்றது.
நீரிழிவு நோயாளிகளின் உடலில் இரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பதால் சோர்வு ஏற்படுகின்றது. நீரிழிவு நோயின் தாக்கம் பிற அங்கங்களிலும் இருக்கின்றது. சில முக்கிய உறுப்புகள் பழுதடைவதற்கும் நீரிழிவு நோய் ஒரு காரணமாகின்றது. அதிகரித்த இரத்த சர்க்கரை அளவு உடல் சோர்விற்கும் காரணமாகின்றது.
ஆகையால் நீரழிவு நோயாளிகள் (Diabetest Patients) தங்களுக்கு ஏற்படும் உடல் சோர்வில் இருந்து நிவாரணம் பெறுவதற்கும் உணவு முறையில் அதிக கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும். நீரிழிவு நோயாளிகள் தங்கள் உடல் ஆற்றலையும், சக்தியையும் அதிகரிக்க பின்பற்ற வேண்டிய சில உணவு முறைகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
இரத்த சர்க்கரை அளவை (Blood Sugar Level) கட்டுக்குள் வைத்து, அதே சமயம் உடலின் ஆற்றலையும் பெருக்குவதற்கு நீரிழிவு நோயாளிகள் கொழுப்பு குறைவாக உள்ள, புரோட்டின் மற்றும் கால்சியம் நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்று சுகாதார நிபுணர்கள் கூறுகிறார்கள். இதனால் தசைகள் மற்றும் எலும்புகள் வலுவடைவதோடு உடலிலும் போதுமான ஆற்றல் கிடைக்கின்றது. அப்படிப்பட்ட சில உணவுகளை இங்கே காணலாம்
கால்சியம் நிறைந்த உணவுகள்
நீரிழிவு நோயாளிகள் கால்சியம் (Calcium) நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும். குறைந்த கொழுப்புள்ள பால், பன்னீர் ஆகியவற்றை இரத்த சக்கரை அளவு அதிகம் உள்ளவர்கள் உட்கொள்ளலாம். இதன் மூலம் உடலுக்கு தேவையான புரதச்சத்தும் கால்சியமும் கிடைக்கின்றது. நீரிழிவு நோயாளிகள் நிறைவுற்ற கொழுப்பை குறைவாகவே உட்கொள்ள வேண்டும்.
கொட்டைகள் மற்றும் காய்கறிகள்
நோயாளிகள் தங்கள் உணவில் பாதாம் பருப்பு (Almonds) மற்றும் அக்ரூட் பருப்பு ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளலாம். இவற்றின் மூலம் உடலுக்கு வைட்டமின்கள், கால்சியம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்பு கிடைக்கின்றது. முழு தானியங்கள், தாவர அடிப்படையிலான பால் ஆகியவற்றையும் டயட்டில் சேர்க்கலாம். காய்களில் (Vegetables) ப்ரோக்கோலி, வாழைக்காய், பீன்ஸ் ஆகியவற்றை உட்கொள்வது நீரிழீவு நோயாளிகளுக்கு நல்லது.
புரதம் நிறைந்த உணவுகள்
நீரிழிவு நோயாளிகள் தங்கள் டயட்டில் புரதச்சத்து (Proteins) நிறைந்த உணவை உட்கொள்ள வேண்டும். புரதச்சத்தை எடுத்துக் கொள்ள சிக்கன், முட்டை, மீன் வகைகள் போன்ற புரதச்சத்து அதிகம் உள்ளவற்றை உணவில் சேர்க்கலாம். நிறைவுற்ற கொழுப்பு குறைவாக உள்ள புரதச்சத்து அதிகம் உணவுகளை நீரிழிவு நோயாளிகள் உட்கொள்ள வேண்டும். முட்டையை சற்று குறைவாக சாப்பிடுவது நல்லது.
நீரிழிவு நோயாளிகள் எப்பொழுதும் தங்கள் இரத்த சர்க்கரை அளவை பரிசோதித்துக் கொள்வது நல்லது. அதற்கேற்றபடியே அவர்கள் தங்கள் உணவு கட்டுப்பாட்டை பராமரிக்க முடியும். இது தவிர உடல் செயல்பாடுகளும், மன அழுத்தம் இல்லாத சூழலும் நீரிழிவு நோயாளிகள் தங்கள் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க மிகவும் உதவியாக இருக்கும்.