விரல் நகத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க நச்சுனு 7 டிப்ஸ் – இதோ!
தண்ணீர் குடித்துக்கொண்டே இருங்கள்: உடலை எப்போதும் நீரேற்றமாக வைத்திருப்பதன் மூலம் நகங்களும் ஆரோக்கியமாக இருக்கும்.
நகத்தை வெட்டுங்கள்: ஒவ்வொரு வாரம் விரல் நகங்களை முறையாக வெட்டுங்கள், கடித்து துப்பாதீர்கள். முறையாக வெட்டுவதன் மூலமும் ஆரோக்கியமாக இருக்கும்.
நகக்கண்ணில் கவனம் தேவை: நகக்கண்ணை சரியாக பராமரிக்காவிட்டால் அழுக்கு மற்றும் கிறுமி அதன் வழியே சென்று தொற்றை ஏற்படுத்தும்.
கையுறை அணியலாம்: கடுமையான வெயில், தூசி போன்ற அசாதாரண சூழல்களில் பணியாற்றும்போது கண்டிப்பாக கையுறை அணிய வேண்டும்.
ஈரப்பதம்: நகங்களை ஈரப்பதத்துடன் வைத்திருப்பதன் மூலமும் அதனை ஆரோக்கியமாக பராமரிக்கலாம்.
சத்தான உணவுகள்: ஊட்டச்சத்துகள் நிறைந்த சத்தான உணவு உண்பதன் மூலமும் நகங்களை ஆரோக்கியமாக வைத்திருக்கலாம்.
செயற்கை நகங்கள் வேண்டாம்: சந்தைகளில் கிடைக்கும் பல்வேறு செயற்கை நகங்களை மாட்டிக்கொள்வது தற்போதைய டிரெண்ட். எனினும் இது உங்களின் விரல் நகங்களை ஆரோக்கியமற்றதாக்கலாம்.