35 வயதா..? உடல் எடை சட்டென்று குறைக்க இந்த மேஜிக் விதை போதும்

உடல் எடை குறைக்க டிப்ஸ்: வெந்தய விதை நமது ஆரோக்கியத்திற்கு ஒன்றல்ல பல நன்மைகளை செய்யும். பெரும்பாலான வீடுகளில் வெந்தயம் பயன்படுத்தப்படும். இதன் விதை மட்டுமல்லாமல் வெந்தய கீரையும் உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும். இத்தகைய மருத்துவ குணங்கள் நிறைந்துள்ள இந்த விதையை தினசரி உணவில் சேர்த்துக் கொள்வது உடலுக்கு ஏராளமான ஆரோக்கிய நன்மைகளைத் தரும். பொதுவாக வெந்தயத்தில் கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ், அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் போன்றவை சத்துக்கள் நிறைந்துள்ளது. இந்த வெந்தய விதைகள் பல ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது, அதுமட்டுமின்றி இந்த விதைகள் (Fenugreek Seeds) எடை குறைக்கவும் பயனுள்ளதாக இருக்கும். வெந்தய விதையில் நல்ல அளவு நார்ச்சத்து உள்ளது. இதனால் நீண்ட நேரம் வயிறு நிரம்பியே இருக்கும். அதேபோல் வெந்தயத்தில் செரிமானத்தை மேம்படுத்தும் பண்புகளும் உள்ளன. இவை வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகின்றன, கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கின்றன மற்றும் இன்சுலின் எதிர்ப்பைக் குறைக்கின்றன. எனவே உடல் எடையை குறைக்க இந்த விதைகளை எவ்வாறு உட்கொள்ள வேண்டும் என்பதை தெரிந்து கொள்வோம்.

உடல் எடை குறைக்க வெந்தயம் விதைகள் | Fenugreek Seeds For Weight Loss:

ஊறவைத்த வெந்தய விதை (Soaked Fenugreek Seed): ஊறவைத்த வெந்தய விதைகள் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். ஊறவைத்த தானியங்களை சாப்பிடுவது தொப்பை கொழுப்பு குறைக்க உதவும் (Belly Fat). இதற்கு ஒரு பாத்திரத்தில் அரை ஸ்பூன் வெந்தயத்தை தண்ணீரில் ஊற வைக்கவும். இந்த ஊறவைத்த தானியங்களை மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் மென்று சாப்பிடவும்.

வெந்தயம் தண்ணீர் (Fenugreek Seed Water): உடல் எடையை (Weight Loss Tips) குறைக்க, வெந்தய நீரை குடிக்கலாம். இந்த தண்ணீரைத் தயாரிக்க, அரை டீஸ்பூன் வெந்தய விதைகளை ஒரு கிளாஸ் தண்ணீரில் இரவு ஊற வைக்கவும். பின்னர் இந்த வெந்தயத்தை சிறிது சூடாக்கி காலையில் வெறும் வயிற்றில் குடிக்கவும்.

வெந்தய தேநீர் (Fenugreek Seed Tea) : வெந்தய தேநீர் மிக எளிதாக ரெடி செய்யலாம். இதற்கு, ஒரு ஸ்பூன் வெந்தயத்தை ஒரு கப் தண்ணீருடன் அடுப்பில் வைக்கவும். அதில் ஒரு சிறிய துண்டு இஞ்சியையும் சேர்க்கவும். இந்த தண்ணீர் கொதித்ததும், ஒரு கப்பில் வடிகட்டி, வெறும் வயிற்றில் பருகவும்.

முளைக்கட்டிய வெந்தயம் (Fenugreek Seeds Sprouts): முளைக்கட்டிய வெந்தயத்தை சாப்பிடுவதும் உடல் எடை குறைப்பதில் நன்மை பயக்கும். இதற்கு முதலில் வெந்தய விதையை இரவு ஊறவைக்கவும், பின்னர் இதை காலையில் வெறும் வயிற்றில் காலை உணவாக எடுத்துக்கொள்ளவும்.

 

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *