Manjummel Boys Box Office: மஞ்சுமெல் பாய்ஸின் அடுத்த சாதனை… தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸ் வசூல் இத்தனை கோடியா?

தமிழ்நாட்டில் மட்டும் 250க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் மஞ்சும்மல் பாய்ஸ் ஓடி வருகிறது. இதனால் இப்படத்தின் வசூலும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. தற்போது இந்த படத்தின் வசூல் நிலவரம் வெளியாகியுள்ளது.

மஞ்சுமெல் பாய்ஸ்:
மலையாள சினிமாவை ஆவலுடன் பார்ப்பதற்காக தமிழ் நாட்டில் எப்போதுமே ஒரு ரசிகர் கூட்டம் இருந்து கொண்டுதான் இருக்கிறது. வழக்கமாக ஓடிடி தளங்களில் வெளியாகும் மலையாள படங்களை பார்த்து விட்டு அது குறித்து பேசும் மக்கள், கடந்த சில நாட்களாக திரையரங்கிற்கு சென்று ஒரு படத்தை பார்க்க சொல்லி தனக்கு தெரிந்தவர்களிடம் கூறி வருகின்றனர். அந்த படம்தான், மஞ்சுமெல் பாய்ஸ்.

கடந்த பிப்ரவரி மாதம் 22ஆம் தேதி வெளியான மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படம், உலகளவில் தற்போது வசூலை குவித்து வெற்றிநடை போட்டு வருகிறது. இந்த படத்தை மலையாள இயக்குநர் சிதம்பரம் எஸ்.பொடுவேல் இயக்கியிருந்தார். பரவா ப்ரொடக்ஷன் நிறுவனத்தின் தயாரிப்பில், இப்படம் உருவானது. அப்படி அனைவரும் பேசும் அளவிற்கு என்ன இருக்கிறது இந்த படத்தில்?

உண்மை கதை:
2006ஆம் ஆண்டு கேரள மாநிலம், கொச்சி-மஞ்சுமெல் என்ற இடத்தில் இருந்து சில நண்பர்கள் கொடைக்கானலுக்கு சுற்றுலா வருகின்றனர். வந்த இடத்தில், குணா குகையில் உள்ள தடை செய்யப்பட்ட பகுதிகளுக்கு சென்று சுற்றி பார்க்கின்றனர். அப்போது, வந்த நண்பர்களில் ஒருவர், பல அடி ஆழம் உள்ள “சாத்தானின் சமையலறை” என்று கூறப்படும் பல அடி ஆழ குகைக்குள் விழுந்து விடுகிறார். அவர் என்ன ஆனார்? அவரை உடன் இருந்த நண்பர்கள் மீட்டனரா இல்லையா? என்பதை சர்வைவல் த்ரில்லர் பாணியில் மஞ்சுமெல் பாய்ஸ் படத்தில் கூறியிருக்கின்றனர்.

இப்படம், உண்மையாகவே கொடைக்கானலுக்கு சென்று அங்கு குணா குகையில் சிக்கி கொண்ட ஒருவர் குறித்து எடுக்கப்பட்ட கதை ஆகும். இதனாலேயே இப்படத்திற்கு ஏராளமானோர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

நாள் வாரியாக பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரம்:
நாள் 1: ரூ 3.3 கோடி
நாள் 2: ரூ 3.25 கோடி
நாள் 3: ரூ 4.25 கோடி
நாள் 4: ரூ 4.7 கோடி
நாள் 5: ரூ 2.6 கோடி
நாள் 6: ரூ 2.75 கோடி
நாள் 7: ரூ 2.8 கோடி
நாள் 8: ரூ 2.7 கோடி
நாள் 9: ரூ 3.7 கோடி
நாள் 10: ரூ 7.45 கோடி
நாள் 11: ரூ 9.5 கோடி
நாள் 12: ரூ 4.5 கோடி
நாள் 13: ரூ 4.35 கோடி
நாள் 14: ரூ 3.9 கோடி
நாள் 15: ரூ 3.75 கோடி
நாள் 16: ரூ 5.5 கோடி
நாள் 17: ரூ. 1.01 கோடி (தோராயமான மதிப்பீடு)

மொத்த 17 நாட்கள் வசூல் நிலவரம்: ரூ. 70.01 கோடி (தோராயமாக)

மாநில வாரியான வசூல் நிலவரம்:
கேரளா – ரூ. 42.75 கோடி
கர்நாடகா – ரூ. 6.50 கோடி
தமிழ்நாடு – ரூ. 25.75 கோடி
இந்தியாவின் மற்ற பகுதிகள் – ரூ. 2 கோடி
மொத்தம் – ரூ. 77 கோடி வசூல் நிலவரம்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *