நிறைய பேர் ஷோரூமுக்கு வருவதே இந்த சிறிய டாடா காரை வாங்க தான்!! மாருதி, ஹூண்டாய் எல்லாம் அதுக்கு அடுத்துதான்!

இந்தியாவில் எஸ்யூவி கார்களுக்கான மார்க்கெட் ஆண்டுத்தோறும் மெல்ல, மெல்ல வளர்ச்சி கண்டு வருகிறது. அதாவது, நம் நாட்டில் எஸ்யூவி கார்களை வாங்குவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எஸ்யூவி கார்களின் சிறப்பம்சமே அவற்றின் நிமிர்ந்த உடலமைப்பு ஆகும். இதனால், எஸ்யூவி கார்களுக்குள் நன்கு விசாலமான இடவசதி கிடைக்கிறது.

மக்கள் எஸ்யூவி கார்களை வாங்க ஆர்வம் காட்டுவதால், கடந்த சில வருடங்களில் பல்வேறு எஸ்யூவி கார்கள் புதியதாக அறிமுகமாகி உள்ளன. அதேபோல், இந்தியாவில் அதிகம் வாங்கப்படும் எஸ்யூவி கார்களின் லிஸ்ட்டில் தொடர்ச்சியாக மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. அதாவது, எஸ்யூவி கார்களை வாங்கும் கஸ்டமர்களின் இரசனை தொடந்து மாற்றமடைந்து வருகிறது.

கடந்த 2024 பிப்ரவரி மாத விற்பனையை பொறுத்தவரையில், இந்தியாவில் அதிகம் விற்கப்பட்ட எஸ்யூவி காராக டாடா பஞ்ச் முதலிடத்தை பிடித்துள்ளது. இதனை சுத்தமாக யாரும் எதிர்பார்க்கவில்லை. ஏனெனில், இந்தியாவின் சிறந்த விற்பனை எஸ்யூவி காராக மாருதி சுஸுகி பிரெஸ்ஸா அல்லது ஹூண்டாய் கிரெட்டா முதலிடத்தை பிடிக்கும் என எதிர்பார்த்தோம்.

டாடா மோட்டார்ஸின் நெக்ஸான் கார் முதலிடத்தை பிடிந்திருந்தால் கூட ஆச்சிரியமாக இருந்து இருக்காது. ஏனெனில், கடந்த மாதங்களில் சிலமுறை டாடா நெக்ஸான் இந்த லிஸ்ட்டில் முதலிடத்தை பிடித்திருந்தது. ஆனால், தற்போது கதையே வேறு. டாடா பஞ்ச் என்கிற அளவில்-சிறிய மைக்ரோ எஸ்யூவி காரை கடந்த பிப்ரவரி மாதத்தில் மக்கள் நிறைய பேர் வாங்கியுள்ளனர். கடந்த மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட டாடா பஞ்ச் கார்களின் எண்ணிக்கை 18,438 ஆகும்.

ஆனால், கடந்த 2023ஆம் ஆண்டின் பிப்ரவரி மாதத்தில் வெறும் 11,169 டாடா பஞ்ச் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இந்த வகையில், கடந்த 2024 பிப்ரவரி மாதத்தில் 65.08%, அதாவது 7,269 பஞ்ச் கார்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. எஸ்யூவி கார்கள் லிஸ்ட்டில் முதலிடம் பிடித்திருக்கும் டாடா பஞ்ச் ஒட்டுமொத்த கார்கள் லிஸ்ட்டில் 2வது இடத்தை பிடித்துள்ளது. டாடா பஞ்ச் மாடலுக்கு அடுத்து கடந்த மாதத்தில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட எஸ்யூவி காராக மாருதி சுஸுகி பிரெஸ்ஸா 2வது இடத்தை பிடித்துள்ளது.

கடந்த 2024 பிப்ரவரி மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட பிரெஸ்ஸா கார்களின் எண்ணிக்கை 15,765 ஆகும். 2023 பிப்ரவரி மாதத்திலும் கிட்டத்தட்ட இதே எண்ணிக்கையிலான பிரெஸ்ஸா கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இருப்பினும் துல்லியமாக பார்த்தால், 2023 பிப்ரவரியை காட்டிலும் இந்த 2024 பிப்ரவரியில் 22 பிரெஸ்ஸா கார்கள் குறைவாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.

ஹூண்டாய் கிரெட்டா இந்த வரிசையில் 3வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த மாதத்தில் மொத்தம் 15,276 கிரெட்டா கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 2023 பிப்ரவரி மாதத்தில் 10,421 கிரெட்டா கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இந்த பிப்ரவரி மாதத்தில் 4,849 கிரெட்டா கார்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. மஹிந்திராவின் ஸ்கார்பியோ என் மற்றும் ஸ்கார்பியோ கிளாசிக் கார்கள் 4வது இடத்தில் உள்ளன.

கடந்த பிப்ரவரி மாதத்தில் ஒட்டுமொத்தமாக 15,051 ஸ்கார்பியோ கார்கள் விற்பனை. 2023 பிப்ரவரியை விட 8,101 அதிகம். முதலிடத்தை பிடிக்கலாம் என்கிற அளவுக்கு பில்டப் செய்யப்பட்ட டாடா நெக்ஸான் இந்த லிஸ்ட்டில் 5வது இடத்தை பிடித்துள்ளது. இருப்பினும், மேலே கூறப்பட்ட மற்ற கார்களுக்கு இணையாக 14,395 நெக்ஸான் கார்கள் கடந்த மாதத்தில் விற்பனை. 2023 பிப்ரவரியில் 13,914 நெக்ஸான் கார்கள் இந்தியாவில் விற்கப்பட்டு இருந்தன.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *