தளபதி விஜய் கட்சி இரண்டே நாளில் புதிய சாதனை..!
தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கினார் நடிகர் விஜய்.இந்த நிலையில் கட்சியின் உறுப்பினர் சேர்க்கை நேற்று முன்தினம் தொடங்கியது. தமிழகம் முழுவதும் 2 கோடி உறுப்பினர்களை கட்சியில் சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் சேருவதற்கான உறுப்பினர் சேர்க்கை செயலியை அறிமுகம் செய்த நடிகர் விஜய், கட்சியின் முதல் நபராக சேர்ந்தார். மேலும், விருப்பப்படுவர்கள் அனைவரும் கட்சியில் இணையுமாறும் வீடியோ வாயிலாக விஜய் வேண்டுகோள் விடுத்தார்.
இந்த நிலையில் உறுப்பினர் சேர்க்கை செயலி அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், ஒரே நேரத்தில் ஏராளமானோர் தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினராக பதிவு செய்ய முயன்றுள்ளனர். இதன் காரணமாக தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கை இணையதளம் முடங்கியது. சில மணி நேரம் கழித்து இணையதளம் பயன்பாட்டுக்கு வந்தது. இந்த நிலையில், 15 மணி நேரத்தில் கிட்டதட்ட 22 லட்சம் பேர் தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினராக கட்சியில் இணைந்துள்ளனர்.
இந்நிலையில் செயலி அறிமுகமான கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 30 லட்சம் பேர் கட்சி உறுப்பினர்களாக சேர்ந்துள்ளனர். இதன்மூலம் அரசியல் வரலாற்றில் புதிய சாததனயை நிகழ்த்தியுள்ளது த.வெ.க.