10 கோடி ரூபாய் காரை டாக்சியாக பயன்படுத்திய அம்பானி..!!
முகேஷ் அம்பானி மற்றும் நீதா அம்பானி, ஆகாஷ் அம்பானி, அனந்த் அம்பானி என் அம்பானி குடும்பத்தினர் ஆடம்பரமான வாழ்க்கை முறைக்கு பெயர் பெற்றவர்கள். ஆனாலும் எளிமையான, பணிவான மனப்பான்மை கொண்டவர்கள்.
அம்பானி குடும்பத்தின் உறுப்பினர்கள் மும்பையில் ரூ.15000 கோடி மதிப்புள்ள வீடான ஆண்டிலியாவில் வசிக்கின்றனர்.இது இந்தியாவின் மிக விலையுயர்ந்த வீடு. நாட்டில் உள்ள சில விலையுயர்ந்த கார்கள் இந்த வீட்டின் கேராஜை அலங்கரிக்கின்றன. முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினர் 100 கோடி ரூபாய் மதிப்பிலான மிகப்பெரிய கார் சேகரிப்பை அங்கு வைத்துள்ளனர்.
சமீபத்தில், ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட்டின் திருமணத்துக்கு முந்தைய விருந்துக்காக ஜாம்நகரில் அம்பானி குடும்பத்துக்குச் சொந்தமான சில கார்கள் காணப்பட்டன. அம்பானிகளுக்கு ஏற்கனவே சில ஃபெராரிகள் மற்றும் ஆட்டோமொபிலி ஆர்டெண்ட் இருப்பது குறித்து இந்தியா இன் இன்ஸ்டாகிராம் பதிவில் பகிரப்பட்டுள்ளது.
இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரர் முகேஷ் அம்பானி, பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானுக்கு ஒரு புதிய ஃபெராரி புரோசாங்கு எஸ்யூவியை ‘ஷட்டில்’ ஆகப் பயன்படுத்தியுள்ளார்.
ஜாம்நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த நடிகர் ஷாரூக் கானின் பயன்பாட்டுக்காக இந்த கார் புதிதாக வாங்கப்பட்டுள்ளது. ஃபெராரி புரசாங்கு என்பது ஃபெராரியின் முதல் நான்கு கதவுகள் கொண்ட எஸ்யூவி ஆகும். இதன் விலை இந்தியாவில் ரூ.10.5 கோடி (எக்ஸ்-ஷோரூம்).
பாலிவுட் சூப்பர் ஸ்டார் இதுபற்றி இன்ஸ்டாகிராமில் பதிவிடப்பட்ட விடியோவில் ஷாருக்கான் ஃபெராரி புரசாங்கு எஸ்யூவியின் முன் பயணிகள் பக்கத்தில் அமர்ந்திருப்பதைக் காணலாம். கவர்ச்சியான இந்தக் கார் ஜாம்நகரில் பிரபல நடிகருக்கு ஷட்டிலாகப் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
ஃபெராரி புரசாங்கு எஸ்யூவி ஆனது 725 PS மற்றும் 716 Nm பீக் டார்க்கை உருவாக்கும் 6.5 லிட்டர் நேச்சுரல் அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது. புரசாங்கு பெயர் காரின் வடிவமைப்பை மிகவும் அழகாக எடுத்துக் காட்டுகிறது. அதன் நேர்த்தியான வெளிப்புறம் மார்க்கெட்டில் உள்ள நான்கு கதவுகள், நான்கு இருக்கைகள் கொண்ட கார்களில் இருந்து அதை வேறுபடுத்துகிறது.
நடுவில் பொருத்தப்பட்ட இயற்கையாக-ஆஸ்பிரேட்டட் வி12 ஒரு கம்பீரமான வசதியான, ஆடம்பரமான இடவசதி கொண்ட கேபினுடன் அமைந்துள்ளது.