தலைவன் வந்துட்டான் டா.. இனி ஐபிஎல் தொடரில் கலக்கல் தான்.. ரிஷப் பண்ட்க்கு கிரீன் சிக்னல்
இந்திய கிரிக்கெட் அணியில் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட், வரும் ஐபிஎல் தொடரில் பங்கேற்க தேசிய கிரிக்கெட் அகாடமி நிர்வாகிகள் அனுமதி அளித்திருக்கும் சம்பவம் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ரிஷப் பன்ட் பயங்கர கார் விபத்தில் சிக்கி உயிர் பிழைத்தார்.
இந்த நிலையில் கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக சிகிச்சை பெற்று வந்த ரிஷப் பன்ட் தற்போது மெல்ல மெல்ல உடல் தகுதியை மீட்டு வருகிறார். பெங்களூருவில் உள்ள தேசிய அகடமியில் தற்போது 100% உடல் தகுதியை எட்டி இருக்கிறார்.
ரிஷப் பண்ட் ஐபிஎல் தொடரின் இம்முறை டெல்லி அணிக்காக விளையாடுவார் என்று கங்குலி ஏற்கனவே கணித்திருந்தார். இந்த நிலையில் தேசிய கிரிக்கெட் அகாடமி நிர்வாகிகள் ரிசப் பண்டை சோதித்தனர். இதில் பண்ட் பெரும் அளவில் முன்னேறி இருக்கிறார். இதனால் வரும் ஐபிஎல் தொடரில் பங்கேற்க அவருக்கு ஒப்புதல் வழங்கப்பட்டிருக்கிறது.
அதேசமயம் ரிஷப் பந்த் இம்முறை ஐபிஎல் தொடரில் வெறும் பேட்ஸ்மேனாக தான் விளையாடுவார் என்று தகவல் வெளியாகி உள்ளது. ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பிங் பயிற்சிகளை செய்து வந்தாலும் அவரை அவசரப்படுத்தி வேறு எந்த சிக்கலையும் உண்டாக்க வேண்டாம் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிகிறது.
தற்போது ஐபிஎல் தொடரில் இம்பாக்ட் பிளேயர் விதி கொண்டுவரப்பட்டிருக்கிறது. இதன் மூலம் பண்டை வெறும் பேட்ஸ்மேன் ஆக மட்டும் பயன்படுத்திவிட்டு பில்டிங்கில் அவருக்கு முழு ஓய்வு வழங்கப்படலாம் என்று தெரிகிறது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள டெல்லி அணியின் இயக்குனர் கங்குலி, ரிஷப் பன்ட் எங்கள் அணிக்கு முழு உடல் தகுதியுடன் வந்திருப்பது மிகப்பெரிய பலத்தை கொடுத்திருக்கிறது.
அவர் இந்த தொடர் முழுவதும் விளையாடுவார் என்று நம்புகிறேன். ஏனென்றால் அவர் ஸ்பெஷல் வீரர். கடந்த ஒரு ஆண்டாக முழு உடல் தகுதியை பெற வேண்டும் என்பதற்காக அவர் கடும் முயற்சியை மேற்கொண்டார். இதனால் தான் என்சிஏ நிர்வாகிகள் அவருக்கு ஐபிஎல் தொடரில் விளையாட அனுமதி அளித்திருக்கிறார்கள் என நினைக்கிறேன் என்று கூறியுள்ளார்.