IND vs ENG – அஸ்வின், பும்ரா கிடையாது.. இவர் தான் சிறந்த பவுலர்.. சஞ்சய் மஞ்சுரேக்கர் கருத்து

இந்தியா இங்கிலாந்து அணிக்கு இடையிலான ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் தற்போது முடிவடைந்து இருக்கிறது இந்த தொடரில் இந்திய அணி நான்குக்கு ஒன்று என்ற கணக்கில் கைப்பற்றி இருக்கிறது.
இந்தப் போட்டிகளில் இந்திய அணியின் சிறந்த பேட்ஸ்மேன், பவுலர் யார் என்பது குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் சஞ்சய் மஞ்சுரேக்கர் மற்றும் ஸ்டீவ் ஹார்மின்சன் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.
இது குறித்து பேசுகையில் இந்த தொடரில் இந்திய அணிக்காக சிறந்த பேட்ஸ்மனாக ஜெய்ஸ்வால்தான் செயல்பட்டு இருக்கிறார் என்று தெரிவித்துள்ளனர். இளம் வீரரான ஜெய்ஸ்வால் இந்த தொடரில் 212 ரன்களை குவித்திருக்கிறார். மேலும் இரண்டு இரட்டை சதம், மூன்று அரை சதம் என சராசரியாகவே 89 என்ற அளவில் ஜெய்ஸ்வால் அசத்திருக்கிறார்.
இதன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆயிரம் ரன்களை அதிவேகமாக கடந்த இந்திய வீரர் என்ற பெருமையை அவர் பெற்றிருக்கிறார். மேலும் இந்த தொடரில் ஜெய்ஸ்வால் மட்டும் 26 சிக்ஸர்களை அடித்து இருக்கிறார். இந்த நிலையில் பும்ரா, அஸ்வின் போன்ற வீரர்கள் இந்த தொடரில் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார்கள்.
ஆனால் சஞ்சய் மஞ்சுரேக்கர் மற்றும் ஸ்டீவ் ஹார்மின்சன் குல்தீப் தான் சிறந்த பவுலர் என்று தேர்வு செய்திருக்கிறார்கள். முதல் போட்டியில் விளையாடாத நிலையில் அவர் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருந்து அணியில் தொடர்ந்து இடம் பிடித்தார். 4 போட்டிகளில் விளையாடிய குல்தீப், 19 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார்.
தர்மசாலாவில் அவர் முதல் இன்னிங்ஸில் ஐந்து விக்கெட்டை வீழ்த்தினார். மேலும் சில இன்னிங்ஸில் முக்கிய ரன்களை அவர் சேர்த்தார். இதனால் குல்தீப் யாதவை இருவரும் சிறந்த பவுலர்கள் என தேர்வு செய்திருக்கிறார்கள்.