பாகிஸ்தானின் புதிய ஜனாதிபதி பதவியேற்பு
பாகிஸ்தான் புதிய ஜனாதிபதியாக ஆசிப் அலி சர்தாரி தேர்வு இரண்டாவது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஆசிப் அலி சர்தாரி இன்று பாகிஸ்தானின் 14 வது ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
2008 முதல் 2013 வரை ஆசிப் அலி சர்தாரி பாகிஸ்தானின் ஜனாதிபதியாக பதவி வகித்துள்ளார்.
கட்சி கூட்டணி
பாகிஸ்தானில் கடந்த மாதம் 8-ந்தேதி நாடாளுமன்ற தேர்தல் நடந்தது. எனினும் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.
நவாஸ் ஷெரீப், பிலாவல் பூட்டோ கட்சிகள் கூட்டணி அரசை அமைத்துள்ளன. பிரதமராக நவாஸ் ஷெரீப் சகோதரர் ஷெபாஸ் ஷெரீப் பதவியேற்றார்.
இதற்கிடையே நவாஸ் ஷெரீப், பிலாவல் பூட்டோ கட்சி கூட்டணி சார்பில் முன்னாள் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
அவருக்குப் போட்டியாக எதிர்க்கட்சிகள் சார்பில் பஷ்துன்க்வா மில்லி அவாமி கட்சித் தலைவர் மக்மூத்கான் அஷ்காஸ் களமிறங்கினார். இவருக்கு இம்ரான்கானின் கட்சி ஆதரவு தெரிவித்தது.
அதிக வாக்கு
இந்நிலையில், பாகிஸ்தானின் புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு நாடாளுமன்றத்திலும் அனைத்து மாகாண சட்டசபைகளிலும் நேற்று நடைபெற்றது.
இதில் ஆசிப் அலி சர்தாரிக்கு 255 வாக்குகள் கிடைத்தன. அவருக்கு எதிராக நிறுத்தப்பட்ட முகமது கான் அசாக்சாய்க்கு 119 வாக்குகள் கிடைத்தன.
இதன்படி அதிக வாக்குகளைப் பெற்ற ஆசிப் அலி சர்தாரி பாகிஸ்தானின் 14-வது ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.