தங்கம் போல் ஜொலிக்கும் சருமத்திற்கு ஒரு சொட்டு காய்ச்சாத பால் போதும்…!
பொதுவாகவே அனைவருக்கும் தங்களது சருமத்தை அழகாக வைத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கும்.
அதற்கு எப்போதும் உதவும் பொருளாக இருப்பது பால் மட்டுமே. அதிலும் காய்ச்சாத பாலானது சருமத்திற்கு நிறைய நன்மைகளை அள்ளித் தருகிறது.
காய்ச்சாத பாலை சருமத்திற்காக பயன்படுத்தும் போது அது சருமத்தை ஒரு நீரேற்றத்துடன் வைத்திருப்பதற்கு உதவுகிறது. காய்ச்சாத பாலை எப்படி பயன்படுத்தலாம் என பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
காய்ச்சாத பால் – 1/2 கப்
ரோஸ் வாட்டர் – 2 தே. கரண்டி
கிளிசரின் – 1 தே. கரண்டி
விட்டமின் ஈ எண்ணெய்
செய்முறை
ஒரு பாத்திரத்தில் காய்ச்சாத பால், ரோஸ் வாட்டர், கிளிசரின் மற்றும் விட்டமின் ஈ எண்ணெய் சேர்த்து கலந்துக்கொள்ளவும்.
பின் இந்த கலவையை முகத்தில் வட்ட வடிவமாக தடவி, 15-20 நிமிடங்களுக்கு அப்படியே விடவும்.
இதை வாரத்திற்கு 2 அல்லது 3 முறை செய்து வந்தால் தங்கம் போல் ஜொலிக்கும் சருமத்தை பெற்றிடலாம்.