வீட்டில் செல்வத்தை குறைக்கும் கடிகாரம் – ஏன் தெரியுமா? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க
பொதுவாகவே பலரது வீட்டிலும் கடிகாரமானது எப்போதும் இருக்கும். கடிகாரம் என்பது நேரத்தைக் கூறுவதற்கு மட்டுமல்ல, நேரத்தைக் கட்டுப்படுத்தவும் முடியும்.
வீடு கட்டும் போது சாஸ்திரம் பார்க்கலாம். ஆனால் கட்டிமுடித்த பிறகு ஏதும் செய்ய இயலாது. ஆனால் வீட்டில் வைக்கக் கூடிய பொருட்களை ஒழுங்கான முறையில் வைத்தால் வீட்டில் செல்வம் அதிகரித்து பணமழை கொட்டும் என நம்பப்படுகிறது.
அந்தவகையில் அனைவரது வீட்டில் இருக்கக் கூடிய கடிகாரத்தை எந்த திசையில் எப்படி வைக்கலாம் என பார்க்கலாம்.
வேலை செய்யாத கடிகாரம் இருந்தால், உடனடியாக அதை வீட்டில் இருந்து அகற்றிவிட வேண்டும்.
கிழக்கு, மேற்கு, வடக்கு திசையில் உள்ள சுவரில்சுவர் கடிகாரத்தை தொங்கவிடலாம்.
தப்பி தவறியும் கூடதெற்கு நோக்கிய சுவரில் தொங்கவிட வேண்டாம்.
வீட்டின் பிரதான வாசலில் தொங்க விடாதீர்கள். அவ்வாறு இருந்தால் வீட்டில் நிம்மதி இருக்காது என கூறப்படுகிறது.
மேலும் உடைந்த, விரிசல், சேதமடைந்த கைக்கடிகாரங்கள் மற்றும் சுவர் கடிகாரங்களை வீட்டில் வைக்கவே கூடாது. அதையும் மீறி இருந்தால் உயிர் போகும் அளவிற்கு வீட்டில் பிரச்சினைகள் வந்துக்கொண்டே இருக்கும்.