உங்கள் PF அக்கவுண்டில் முன்பணம் எடுக்க முடியவில்லையா.. நிராகரிக்கபடுவதற்கு காரணம் இதுதான்

மத்திய அரசின் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் படி அலுவலக பணி செய்பவர்களிடம் இருந்தும் ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட தொகை பிஎஃப் திட்டத்தில் டெபாசிட் செய்யப்படுகிறது. பணியாளர் செலுத்தும் அதே தொகையை நிறுவனமும் ஊழியரின் பிஃப் கணக்கில் டெபாசிட் செய்யவேண்டும்.

ஊழியர்களில் ஓய்வுக்கால நலனுக்காக இந்த திட்டம் செயற்பாட்டில் இருந்து வருகிறது. இந்த திட்டம் ஊழியர்களுக்கு நிதி ரீதியான பிரச்னைகளை சமாளிக்க உதவியாக இருக்கும்.

ஊழியர்கள் ஓய்வுபெறும்போது ஓய்வூதிய தொகையாக இந்த தொகையை பெற்றுக்கொள்ளலாம். மேலும், அவசரக் காலத்திலும் முன்பணமாக பிஃப் தொகையை பெற்றுக்கொள்ளலாம். EPFO இணையத்தளத்தில் நீங்கள் விரும்பும் தொகையை ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

10 வேலை நாட்களில் உங்களது கோரிக்கை நிறைவேற்றப்படும். சில நேரங்களில் உங்களுக்குக் கோரிக்கை நிகாரிக்கப்பட வாய்ப்புள்ளது. எந்தெந்த காரணங்களினால் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுகின்றன என்பதைப் பற்றிப் பார்க்கலாம்.

நிராகரிக்கப்படுவதற்கான காரணங்கள் : EPFO இணையத்தளத்தில் உங்களுடைய UAN அதாவது உலகளாவிய கணக்கு எண் கொண்டு உள்நுழைய வேண்டும். பிஃப் தொகையை பெறுவதற்கு முக்கியமாக உங்களில் ஆதாருடன் உங்களுடைய மொபைல் எண் இணைத்திருக்க வேண்டும். உங்களுடைய வங்கி எண்ணுடன் மொபைல் எண் மற்றும் ஆதார் எண் இணைத்திருக்க வேண்டும்.

KYC தகவல்கள் சரியாக இருத்தல் : பிஃப் கணக்கில் முதலில் KYC தகவல்களுடன் இணைக்க வேண்டும். இதன் மூலம் உங்கள் வங்கிக் கணக்கு பிஃப் கணக்குடன் இணையும். அடுத்தது பிஃப் கணக்கிற்கு நாபினியை (Nominee)சேர்க்க வேண்டும்.

தவறான தகவல்கள் : உங்களுடைய ஆதார் கார்டு, பான் கார்டு, வங்கி ஆகியவற்றில் இடம்பெற்று இருக்கும் தகவல்கள் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். உதாரணத்திற்கு ஊழியரின் பெயர், பிறந்த தேதி ஆகியவை சரியாக இருக்க வேண்டும்.

புதுப்பிக்கப்படாத வங்கிக் கணக்குகள் : உங்களில் பழைய வங்கிக்கணக்கை பிஃப் கணக்குடன் இணைத்து வைத்திருப்பீர்கள் என்றால் பணத்திற்கு விண்ணப்பிப்பதற்கு முன்பு அந்த வங்கிக் கணக்கைச் சரிபார்த்து புதிய கணக்கை இணைத்த பின்புதான் பயன்படுத்த வேண்டும்.

காசோலையில் பெயர் : பிஃப் தொகைக்காக விண்ணப்பிக்கும்போது உங்களுடைய வங்கியின் காசோலையின் புகைப்படத்தை அப்லோடு செய்து விண்ணப்பிக்க வேண்டும். காசோலையில் உங்களின் பெயர் கட்டாயம் இடம்பெற்று இருக்க வேண்டும். காசோலையில் இடம்பெற்று இருக்கும் தகவல்கள் உங்களின் KYC தகவலுடன் சரியாக இருக்க வேண்டும்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *