ரஜினி படத்தில் கண்ணதாசன் பாடல்… டி.எம்.எஸ்-ஐ வீழ்த்திய மனோரமா : க்ளாசிக் ப்ளாஷ்பேக்
தமிழ் சினிமாவில் தெய்வீக பாடகர் என்று பெயரெடுத்த டி.எம்.சௌந்திரராஜன், எம்.ஜி.ஆர், சிவாஜி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு அவர்கள் பாடுவது போன்றே பாடல்களை பாடி அசத்தியருந்தாலும், ஒரு பாடலில் மனோரமாவுடன் சேர்ந்து குழப்பத்தில் பாடியது போன்ற உணர்வை கொடுத்திருப்பது பலரும் அறியாத ஒரு தகவல்.
1979-ம் ஆண்டு டி.ஆர்.ராமன்னா இயக்கத்தில் வெளியான படம் குப்பத்து ராஜா. ரஜினிகாந்த், விஜயகுமார், மஞ்சுளா, மனோரமா, அசோகன் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படத்திற்கு எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்திருந்தார். படத்திற்கான அனைத்து பாடல்களையும் கவியரசர் கண்ணதாசன் எழுதியிருந்தார். இந்த படத்தில் 2-வது ஹீரோவாக நடித்திருந்தாலும் படத்தின் முடிவில் ரஜினிகாந்த் முக்கிய ஹீரோவாக உருவெடுத்திருப்பார்.
அதேபோல் படத்தின் அத்தனை பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்தில் கொடிகட்டி பறக்குதடா என்ற பாடலை, டி.எம்.சௌந்திரராஜன், மலேசியா வாசுதேவன், எல்.ஆர்.ஈஸ்வரி, மனோரமா உள்ளிட்ட 4 பேர் படியிருந்தனர். ரஜினிகாந்த் மக்களுடன் தங்கியிருக்கும் குப்பத்தை காலி பண்ண வேண்டும். இல்லை என்றால் 2 லட்சம் பணம் தர வேண்டும் என்று அந்த ஊர் தலைவர் சொல்லிவிடுவார்.
அதற்கு சம்மதம் தெரிவித்த ரஜினிகாந்த், ஊர் தலைவர் வீட்டில் இருந்தே பணத்தை கொள்ளையடித்து வந்து, அவரிடமே பணத்தை கொடுத்து குப்பத்தை மீட்டெடுப்பார். அப்போது குப்பத்து மக்கள் அனைவரும், மகிழ்ச்சியல் பாடும் இந்த பாடல் தான் கொடிகட்டி பறக்குதடா என்ற பாடல். தொடக்கத்தில் ஜாலியாக தொடங்கும் இந்த பாடல், இடையில் சமகால அரசியல், அரசியல்வாதிகளின் நிலை என அனைதையும் தோலுரித்த மாதிரி வரிகளை போட்டிருப்பார் கண்ணதாசன்.