கோடை காலத்தில் இந்த உணவுகளை கட்டாயம் எடுத்துக்கோங்க! உடம்பு குளிர்ச்சியாக இருக்கும்
வெயில் காலங்களில் நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுகளை குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.
கோடை காலம்
பொதுவாக கோடை காலம் வந்துவிட்டாலே அதிக சூரிய ஒளி நம்மை சோர்வடைய வைத்துவிடும். இதற்கு முக்கிய காரணம் நமது உடம்பிலிருந்து வெளியேறும் அதிகப்படியாக வியர்வை தான்.
காலநிலைக்கு ஏற்ப நம்மை மாற்றிக்கொள்ளவும், பாதுகாப்பாக இருக்கவும் உணவு மிகவும் முக்கியமாகும். வெயில் கடுமையாக இருக்கும் கோடைகாலங்களில் உடம்பில் நீர்ச்சத்து அதிகமாக தேவைப்படுகின்றது.
வியர்வை மற்றும் சோர்வாக இருப்பதுடன், சுறுசுறுப்பு இல்லாமல் வேலையில் தாமதம் ஏற்படும். இதனை சரிசெய்ய சில உணவுகளை கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
உடம்பை குளிர்ச்சியாக வைக்கும் உணவுகள்
நமது உடம்பை குளிர்ச்சியாக வைத்திருக்க தர்பூசணி உதவியாக இருக்கும். 92 சதவீதம் நீர்ச்சத்து கொண்ட இந்த பழத்தில் லைகோபீன், ஆக்ஸிஜனேற்ற கூறுகள், வைட்டமின் ஏ, வைட்டமின் சி, பொட்டாசியம் மற்றும் அமினோ அமிலங்கள் நிறைந்துள்ளன. இவை உடம்பை குளிர்ச்சியாகவும், கோடை காலத்தில் ஆரோக்கியமாக உடம்பை வைத்திருக்கும்.
95 சதவீதம் நீர்ச்சத்து நிறைந்திருக்கும் வெள்ளரிக்காய் கோடை காலத்திற்கு ஏற்றதாகும். இவை உடம்பிலுள்ள நச்சுக்களை வெளியேற்றி நீரிழப்பு பிரச்சினை வராமல் தடுக்கின்றது.
கோடை காலத்திற்கு ஏற்ப குளிர்ச்சியான உணவுகளில் தயிர் ஒன்றாகும். தயிர் உடம்பிற்கு குளிர்ச்சி அளிப்பதுடன், ஊட்டச்சத்துக்கள் அதிகமாகவும் உள்ளது.
அதிக அளவு நீர் உள்ளடக்கம் மற்றும் எலக்ட்ரோலைட் உள்ளடக்கத்தினை கொண்ட உணவு பொருளான செலரி கோடை காலத்தில் சிறந்த உணவாகும். உடம்பில் நீரிழப்பு ஏற்படாமல் தடுப்பதுடன் இதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் சருமத்தை சுத்தப்படுத்தி வயதான தோற்றத்தை தடுக்கின்றது.
தவிர்க்க வேண்டியது எது?
அதிகப்படியாக வெப்பம் காணப்படுகையில், குளிர்ச்சியான செயற்கை கார்பனேற்றப்பட்ட பானங்கள், ஐஸ்கிரீம் ஆகியவற்றை சாப்பிடுவதை தவிர்க்கவும். அதே போன்று காபி அல்லது டீ மற்றும் எண்ணெய்யில் பொரித்த உணவுகளை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.