Ajith Kumar: ஆப்ரேஷன் முடிந்த மறுநாளே இப்படியா செய்வது? அஜித்தின் வைரல் காணொளி

நடிகர் அஜித் ஆப்ரேஷன் முடிந்த மறுநாளே தனது மகளின் பள்ளிவிழாவில் கலந்து கொண்டுள்ள காணொளி அனைவரையும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் அஜித்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம்வரும் நடிகர் அஜித், இரு தினங்களுக்கு முன்பு மருத்துவமனையில் திடீரென அனுமதிக்கப்பட்டார்.

இந்த தகவல் திரையுலகினர், ரசிகர்கள் என அனைவரையும் பரபரப்பில் ஆழ்த்தியது. இதற்கு அஜித்தின் மேலாளர், விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பு மார்ச் 15ம் தேதி முதல் மீண்டும் அஜர்பையான் நாட்டில் தொடங்க உள்ளதால், ரெகுலர் செக்கப் செய்வதற்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக விளக்கம் அளித்துள்ளார்.

ஆனால் அஜித்திற்கு மூளையில் கட்டி இருப்பதாகவும், தண்டுவட பகுதியில் பிரச்சினை இருப்பதாகவும் 4 மணி நேரம் அறுவை சிகிச்சை நடக்க உள்ளதாக கூறப்பட்டது. இதனால் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.

தற்போது அவரது மேலாளர் அளித்த விளக்கத்தில், மூளையில் கட்டி இருப்பதாக கூறியது உண்மையல்ல… அவரது காதுக்கு கீழே நரம்பு வீக்கம் உள்ளதாகவும், அதற்காக சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் கூறினார்.

மகன் விழாவில் அஜித்
இந்த நிலையில் அறுவை சிகிச்சை செய்தபின் அஜித் முழு ஓய்வு எடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரது மகன் படிக்கும் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மனைவி ஷாலினியுடன் கலந்து கொண்டுள்ளார்.

சர்ஜரி செய்த அடுத்த நாளே அஜித் வெளியே வந்து ஜாலியாக பேசிக் கொண்டிருக்கும் வீடியோவை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.

இந்த நிலையில் அடுத்த வாரம் அஜித் ’விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பிற்காக வெளிநாடு செல்ல உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

https://twitter.com/prakashpins/status/1766485646032744809

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *