கறி சுவையை மிஞ்சும் மீல்மேக்கர் மிளகு வறுவல்: ரெசிபி இதோ
சைவ பிரியர்கள் அதிகம் விரும்பி சாப்பிடும் ஒரு உணவு தான் இந்த மீல்மேக்கர்.
மீல்மேக்கர் வைத்த பலவிதமான உணவுகள் செய்யலாம், அதில் மிகவும் சுவையாக இருக்கக்கூடிய ஒரு உணவு தான் இந்த மீல்மேக்கர் மிளகு வறுவல்.
இந்த மீல்மேக்கர் மிளகு வறுவலை சுலபமாக எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
மீல்மேக்கர்- 100g
எண்ணெய்- தேவையான அளவு
சோம்பு- ¼ ஸ்பூன்
பூண்டு- 4 பல்
காய்ந்த மிளகாய்- 2
கறிவேப்பிலை- 1 கொத்து
வெங்காயம்- 2
இஞ்சி பூண்டு பேஸ்ட்- 1 ஸ்பூன்
தக்காளி- 1
மிளகாய் தூள்- 2 ஸ்பூன்
மல்லி தூள்- 1½ ஸ்பூன்
மஞ்சள் தூள்- ¼ ஸ்பூன்
உப்பு- தேவையான அளவு
தேங்காய் பால்- 1 கப்
மிளகு தூள்- 1 ஸ்பூன்
கொத்தமல்லி- சிறிதளவு
செய்முறை
முதலில் மீல்மேக்கரை சுடுதண்ணீரில் 10 நிமிடம் நன்கு ஊறவைத்த பிழிந்து எடுத்துக்கொள்ளவும்.
பின் ஒரு வாணலில் எண்ணெய் சேர்த்து அதில் சோம்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, நறுக்கிய பூண்டு, வெங்காயம், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு வதக்கவும்.
அடுத்து இதில் தக்காளி சேர்த்து வதக்கி உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள் சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
பின் இதில் தேங்காய் பால் சேர்த்து கலந்து கெட்டியாகி வந்ததும் பிழிந்து வைத்துள்ள மீல்மேக்கரை சேர்த்து 5 நிமிடம் கிளறவும்.
இறுதியாக இதில் மிளகு தூள், கொத்தமல்லி இலை தூவி கிளறி இறக்கினால் சுவையான மீல்மேக்கர் மிளகு வறுவல் தயார்.