சில தனியார் மருத்துவமனைகள் பணத்திற்காக…. சத்யராஜ் மகள் திவ்யா கூறிய ஷாக்கிங் தகவல்! |
நடிகர் சத்யராஜுக்கு சிபிராஜ் என்ற மகனும், திவ்யா என்ற மகளும் உள்ளனர். மகள் திவ்யா சத்யராஜ், ஊட்டச்சத்து நிபுணராக பணியாற்றி வருகிறார். நியூட்ரிஷன் துறையில் M.Phil., பட்டம் பெற்றுள்ள திவ்யா, இந்தியாவில் உள்ள டாப் நியூட்ரிசனிஸ்ட்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார்.
இந்நிலையில், ஒரு சில தனியார் மருத்துவமனைகள் குறித்து அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள வீடியோ ஒன்று சமூக வலைதலங்களில் வைரலாகி வருகிறது. அதில், சில தனியார் மருத்துவமனைகள் பணத்திற்காக நோயாளிகளுக்கு தேவையில்லாத ரத்தப் பரிசோதனைகள், ஸ்கேன், எம்.ஆர்.ஐ. என பல டெஸ்;lடுகள் எடுப்பதாக குற்றம்சாட்டியுள்ளார். நோயாளிகள் வருவாய் உருவாக்கும் இயந்திரங்கள் கிடையாது. தனியார் மருத்துவமனை வைத்திருப்பவர்கள் நோயாளிகளை மனிதாபிமானத்தோடு நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.