இன்று புதுக்கோட்டை மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு..!

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் இன்று உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

இந்த விடுமுறை தினத்தை ஈடு செய்யும் வகையில் வரும் மார்ச் 16 அன்று (சனிக்கிழமை) பணிநாளாக செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.வழக்கமாக சனிக்கிழமைகளை பணி நாளாகக் கொண்ட அலுவலகங்களுக்கு மார்ச் 17 அன்று (ஞாயிற்றுக்கிழமை) பணிநாள் எனவும் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா அறிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை நகரைச் சேர்ந்த திருவப்பூர் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோவில் தேர்த்திருவிழா 11.03.2024 அன்று நடைபெறுவதை முன்னிட்டு அன்றைய தினம் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உள்ளுர் விடுமுறை 1881-ஆம் ஆண்டு செலாவணி முறிச்சட்டத்தின் கீழான விடுமுறை நாள் அல்ல எனவும், இந்த உள்ளூர் விடுமுறை நாளன்று புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள மாவட்ட கருவூலகம் மற்றும் சார்நிலை கருவூலகங்களும் குறைந்தபட்ச அலுவலர்களுடன் அரசின் பாதுகாப்பினைக் கருதியும் அவசர அலுவல்கள் மேற்கொள்ளும் பொருட்டு திறந்திருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அரசு பொதுத்தேர்வுகள், அரசு அறிவித்த தேதிகளில் நடைபெறும் எனவும்மாவட்ட ஆட்சித்தலைவர் மெர்சி ரம்யா தெரிவித்துள்ளார்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *