மேலும் ஒரு வந்தே பாரத் ரயில் : பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார்..!
பெங்களூருவிலிருந்து ஏற்கனவே சென்னைக்கு ஒரு வந்தே பாரத் ரயில் இயக்கப்படும் நிலையில், சென்னைக்கு மற்றொரு வந்தே பாரத் ரயில் நாளை 12-ம் தேதியிலிருந்து இயக்கப்படவுள்ளது. இந்த ரயில் சேவையை பிரதமர் மோடி நாளை 12-ம் தேதியன்று காணொலி காட்சி மூலம் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். இத்தகவலை பெங்களூரு மத்திய தொகுதி எம்.பி பி.சி.மோகன் உறுதிப்படுத்தியுள்ளார்.
பெங்களூரு – சென்னை இடையேயான பழைய வந்தே பாரத் ரயில் வெள்ளை மற்றும் நீல நிற காம்பினேஷனில் இருக்கும் நிலையில், புதிய வந்தே பாரத் ரயில் வெள்ளை மற்றும் காவி நிறத்தில் இருக்கும். இந்த ரயில் சேவையின் நேர அட்டவணை மற்றும் கட்டணம் ஆகிய விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. மேலும், பெங்களூரு – கலபுர்கி மற்றும் பெங்களூரு – மதுரை இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையையும் பிரதமர் மோடி தொடங்கி வைக்கவுள்ளார்.