எஃப்1 கார் ரேஸ் பெட்ரோலை இந்தியாவிலேயே தயாரிக்க முடிவு! 3 மாதத்தில் நடக்கப்போகும் அதிசயம்
இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் ஓடிசாவில் உள்ள பிரதீப் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் எஃப் 1 கார் பந்தயத்திற்கான எரிபொருளை தயாரிக்க முடிவு செய்துள்ளது. இதற்கான சான்றிதழ் பெறும் வழிமுறைகள் எல்லாம் அடுத்த மூன்று மாதத்தில் முடிவு பெற்று எஃப் 1 கார் பந்தயத்திற்கான எரிபொருள் தயாரிக்கப்படும் என கூறப்படுகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் எஃப் ஒன் கார் ரேஸிற்கான சிறப்பான எரிபொருளை தயாரிக்க முடிவு செய்துள்ளது. அடுத்த மூன்று மாதத்தில் இதற்கான பணிகள் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சிறப்பான எரிபொருள் என்பது ஒடிசாவில் அந்நிறுவனத்திற்கு சொந்தமான பிரதீப் எண்ணெய் சுத்திகரிப்பு மையத்தில் வைத்து தயாரிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் ஏற்கனவே 2024-2026 வரை எஃப்ஐஎம் ஆசியா ரோடு ரேஸிங் சாம்பியன்ஷிப் போட்டிக்கான அதிகாரப்பூர்வ எரிபொருள் பார்ட்னராக இணைந்துள்ளது. இதன் ஒரு முயற்சியாக இந்திய ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் தற்போது எஃப் கார் ரேஸிற்கான எரிபொருளை தயாரிக்க முடிவு செய்துள்ளது. இதற்கான சான்றுகளை பெறும் பணி தற்போது துவங்கியுள்ளது. சான்றுகள் இன்னும் மூன்று மாதத்திற்குள் கிடைத்துவிடும் நிலையில் இந்த எரிபொருளை தயாரிக்க நிறுவனம் முயற்சிகளை மேற்கொள்ளும்.
தற்போது எஃப் 1 கார் பந்தயத்திற்காக இ10 எரிபொருள் எனப்படும் பெட்ரோலில் 10% எத்தனாலை கலந்து தயாரிக்கப்படும் எரிபொருள்தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் 2026-ம் ஆண்டிற்குள் 100% ஹைபிரிட் எரிபொருளை பயன்படுத்த திட்டமிடப்பட்டு அதற்கான பணிகளை நோக்கி நகர்ந்து வருகிறது. அதற்குள் எஃப் 1 ஹைபிரிட் பவர் யூனிட்டுகள் முழுமையாக எஃப் 1 கார் ரேஸ்களில் பயன்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சாலைகளை போல அல்லாமல் எஃப்1 கார் பந்தயத்தை முழுமையாக எலெக்ட்ரிக் கார் பந்தையமாக நடத்த முடியாது. ஏற்கனவே இப்படியான ஒரு எலெக்ட்ரிக் சாம்பியன்ஷிப் போட்டி ஃபார்முலா இ என்ற பெயரில் நடந்து வருகிறது. அதனால் எரிபொருளை கொண்டு எஃப் 1 கார் ரேஸை நடத்த முடியும். இந்நிலையில் எஃப் 1 கார் பந்தயத்தில் ஏற்படும் கார்பன் வெளியேற்றத்தை குறைப்பதற்கான வழிமுறைகள் தற்போது பின்பற்றப்பட்டு வருகின்றன.
எஃப் 1 கார் பந்தத்தை பொறுத்தவரை உலகின் மிக வேகமான கார் பந்தையமாக பார்க்கப்படுகிறது. இந்த கார் பந்தையத்திற்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். உலகம் முழுவதும் இந்த கார் பந்தயம் வரிசையாக ஒவ்வொரு சீசன்களாக நடந்து கொண்டே தான் இருக்கிறது. ஆண்டு முழுவதும் இந்த கார் ரேஸ் பந்தயம் ஏதாவது ஒரு நாட்டில் நடந்து கொண்டே தான் இருக்கும்.
இந்நிலையில் எஃப் 1 கார் பந்தையத்தின் மூலம் வெளியேறும் மாசுவின் அளவு என்பது அதிகமாக இருப்பதால் இதை குறைப்பதற்காக பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு முயற்சியாக தான் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் இதற்கான சிறப்பான எரிபொருளை தயாரிக்க தற்போது திட்டமிட்டுள்ளது. அடுத்த மூன்று மாதங்களில் இது தயாராகும் என தெரிகிறது.
இந்த சிறப்பான எரிபொருள் தயாராகி பயன்பாட்டிற்கு வந்துவிட்டால் இனி எஃப் 1 கார் ரேஸ் பந்தயங்களில் இருந்து வெளியேறும் மாசுவின் அளவு வெகுவாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிப்பதை குறைப்பதற்கான ஒரு முயற்சியாகும். இந்தியாவிலிருந்து எஃப் 1 கார் பந்தையத்திற்கு எரிபொருளை தயாரிப்பது இது முதன் முறையாகும்.
இதற்கு முன்னால் வெளிநாடுகளில் மட்டுமே கார் பந்தயத்திற்கான எரிபொருளை தயாரித்து அதை மட்டுமே கார்களில் பயன்படுத்தி வந்தார்கள். சாதாரண ரீடைல் மார்க்கெட்டில் கிடைக்கும் எரிபொருளை எஃப் 1 கார் பந்தயத்தில் உள்ள கார்களுக்கு பயன்படுத்த மாட்டார்கள். எரிபொருளில் பெர்ஃபார்மென்ஸ் அளவு மாறுபடும் என்பதால் அதை மிக உன்னிப்பாக கவனித்து கவனமாக இருப்பார்கள்.