தன் குழந்தையின் அப்பாவை அறிமுகப்படுத்திய நடிகை இலியானா…வைரலாகும் புகைப்படங்கள்
நடிகை இலியானா தனது காதலனின் புகைப்படங்களை சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார் இது தற்போது வைரலாகி வருகின்றது.
நடிகை இலியானா
நடகை இலியானா சமீபத்தில் கணவர் மற்றும் காதலன் கூட யார் ? என்று தெரிவிக்காமல் அவர் குழந்தை பெற்றெடுக்கப்போவதாக அறிவித்து இருந்தார். இதனால் இவர் சமூக வலைத்தள பக்கத்தில் பேசும் பொருளாக மாறினார்.
தெலுங்கு மற்றும் இந்தி திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை இலியானா. தமிழ் திரைப்படங்களில் குறைவான அளவிலேயே படங்கள் நடித்துள்ளார்.
இப்படி நடிப்பில் பிஸியாக இருந்த இலியானா 2021 ம் ஆண்டு உடல் எடை அதிகமான காரணத்தினால் படங்கள் நடிப்பதில் இருந்து விலகி இருந்தார். இதன் பின்னர் தான் அவர் உடல் எடை கூடியதற்கான காரணத்தை பகிர்ந்து கொண்டிருந்நதார்.
அந்த வகையில் அவர் குழந்தை பெற்றெடுப்பதற்காக தயாராகி இருப்பதால் தான் இவ்வாறு இருக்கிறார் என தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார்.
இப்படி கணவரை வெளிக்காட்டாமல் இருந்த இலியானா தற்போது தனது சமூக வலைத்தள பக்கத்தில் தன் கணவரின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.