மீனத்தில் புதன் உதயம்: இந்த ராசிகளின் வாழ்வில் ஏற்றம்… மகிழ்ச்சி மழையில் நனைவார்கள்
கிரக பெயர்ச்சிகளுக்கு ஜோதிட சாஸ்திரத்தில் அதிகப்படியான முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. பல்வேறு கிரகங்களும் ராசிகளில் பல்வேறு விதமான மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. ராசிகளின் குணாதிசயங்களும் மாறுபடுகின்றன. கிரகப்பெயர்ச்சிகள் ஏற்படும் போது சில ராசிகளுக்கு சுப பலன்களும் சில ராசிகளுக்கு பிரச்சனைகளும் ஏற்படும்.
கிரகங்களின் இளவரசராக கருதப்படும் புதன் மார்ச் 15ஆம் தேதி மீன ராசியில் உதயமாக உள்ளார். 8 பிப்ரவரி முதல் புதன் அஸ்தமன நிலையில் உள்ளார். இன்னும் ஐந்து நாட்களில் அவர் உதயமாவார். பொதுவாக கிரகங்கள் அஸ்தமன நிலையில் இருக்கும் பொழுது அவற்றின் ஆற்றல் குறைகின்றது. உதயமானவுடன் ஆற்றல் அதிகரிக்கிறது.
புதன் உதயத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும் சில ராசிகளுக்கு புதன் அதிகப்படியான நற்பலன்களை அள்ளித் தருவார். இவர்கள் மகிழ்ச்சி மழையில் நனைவார்கள். மாணவர்களுக்கு அதிகப்படியான நன்மைகள் கிடைக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். அந்த அதிர்ஷ்ட ராசிகளைப் (Zodiac Signs) பற்றி இந்த பதிவில் காணலாம்
ரிஷபம் (Taurus)
மீனத்தில் உதயமாகும் புதனால் ரிஷப ராசிக்காரர்களின் பண வரவு அதிகமாகும். புதிய பணித்திட்டங்களை தொடங்கும் எண்ணம் கொண்டவர்கள் புதன் உதயத்திற்கு பிறகு அதை செய்யலாம். பணம் சம்பாதிக்க பல வித வாய்ப்புகள் கிடைக்கும். கணவன் மனைவியிடையே ஒற்றுமையும் பாசமும் அதிகமாகும். குடும்பத்தினருடன் சுற்றுலா சென்று வருவீர்கள். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். அனைத்து பணிகளிலும் உங்களுக்கு வெற்றி உண்டாகும். பண வரவு அதிகரிக்கும். உங்கள் பொருளாதார நிலைமை மேம்படும். கடின உழைப்பிற்கான முழுமையான பலன் கிடைக்கும்.
மிதுனம் (Pisces)
பணியிடத்தில் உங்கள் பணி பாராட்டப்படும். ஊதிய உயர்வும், பதவி உயர்வும் கிடைக்கும். மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். பணத்தை மிச்சப் படுத்தி சேமிப்பதில் வெற்றி காண்பீர்கள். வேலை தேடிக் கொண்டிருக்கும் மிதுன ராசிக்காரர்களுக்கு இப்பொழுது நல்ல வேலை கிடைக்கும். வீடு வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். சுப பலன்கள் தேடி வரும். இந்த காலத்தில் உங்கள் நிதிநிலை மேம்படும். உங்கள் பேச்சால் மற்றவர்களை ஈர்ப்பீர்கள். உங்களுக்கு இந்த காலம் ஒரு வரப்பிரசாதமாக அமையும்.
கடகம் (Cancer)
கடக ராசிக்காரர்களுக்கு மீனத்தில் புதனின் உதயம் அற்புதமான பலன்களை அள்ளித்தரும். ஆன்மீகப் பணிகளில் நாட்டம் அதிகரிக்கும். குடும்பத்தினருடன் சுற்றுலா சென்று வருவீர்கள். சமூகத்தில் உங்கள் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். பணியிடத்தில் சம்பள உயர்வும், ஊதிய உயர்வும் கிடைக்கும். உங்கள் ஆளுமையால் மற்றவர்களை ஈர்ப்பீர்கள். நீங்கள் திட்டமிடும் பணிகளில் வெற்றி கிடைக்கும் . உறவினர்கள் மற்றும் நண்பர்களின் ஆதரவும் அன்பும் கிடைக்கும். அதிகப்படியான பண வரவு இருக்கும். மாணவர்களுக்கு அதிகப்படியான நன்மைகள் கிடைக்கும். போட்டித் தேர்வுகளில் வெற்றி கிடைக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். இந்த காலத்தில் பல நல்ல செய்திகள் கிடைக்கும்.