இன்னும் 3 நாட்களில் சூரியப் பெயர்ச்சி.. இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம், திடீர் பண லாபம்
வேத ஜோதிடத்தின் படி, அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்களது ராசிகளை மாற்றுகின்றன. இந்த கிரக மாற்றங்கள் பெயர்ச்சிகள் என்று அழைக்கப்படுகின்றன. கிரக பெயர்ச்சிகளுக்கு அதிகப்படியான முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் கிரகங்களின் ராஜா என்று அழைக்கப்படும் சூரியன் வரும் மார்ச் 14 அன்று மீன ராசியில் பெயர்ச்சி அடையப் போகிறார். மீன ராசியில் அதிபதி குரு என்பதால், குரு மற்றும் சூரியனுக்கும் இடையே நட்பு உணர்வு உள்ளது. அத்தகைய சூழ்நிலையில், சூரியனின் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களுக்கும் தெரியும். ஆனால் இந்த நேரத்தில் மூன்று ராசிக்காரர்களுக்கு மட்டும் பண வரவு, அதிர்ஷ்டம், பதவி உயரவு போன்றவற்றை பெறுவார்கள். மேலும் இந்த ராசிக்காரர்களுக்கு மரியாதை மற்றும் கௌரவம் அதிகரிக்கும். எனவே இந்த அதிர்ஷ்ட ராசிகள் எவை என்று பார்ப்போம்.
மிதுனம் (Gemini Zodiac Sign):
சூரிய பகவானின் ராசியில் ஏற்படும் மாற்றத்தால் மிதுன ராசிக்காரர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும். ஏனெனில் இந்தப் பெயர்ச்சியானது மிதுன ராசியின் கர்ம வீட்டில் நடக்கப் போகிறது. எனவே, இந்த நேரத்தில் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படலாம். இதனுடன், பொருள் வசதிகள் கூடும். சுப பலனையும் பெறுவீர்கள். வருமானம் அதிகரிக்கும். வேலை வாய்ப்பை பெறுவீர்கல். புதிய வேலையில் சேரலாம். அதே நேரத்தில், இந்த நேரத்தில் நல்ல லாபம் கிடைக்கலாம். வணிக ஒப்பந்தத்தை பெறலாம். நிதிநிலை நன்றாக இருக்கும். வணிகம் செய்பவர்கள் நல்ல லாபத்தை ஈட்டலாம்.
கன்னி (Virgo Zodiac Sign):
சூரிய பகவானின் ராசி மாற்றத்தால் கன்னி ராசிக்காரர்களுக்கு சாதகமான பலனைத் தரும். ஏனெனில் இந்த ராசி மாற்றம் கன்னி ராசியின் ஏழாம் வீட்டில் நடக்கப் போகிறது. எனவே, திருமண வாழ்க்கை மகிழ்ச்சியுடனுடன், அற்புதமாகவும் இருக்கும். மேலும், இந்த காதல் வாழ்க்கை அற்புதமாக இருக்கும். அன்பும் மரியாதையும் அலுவலகத்தில் அதிகரிக்கும். திருமணம் வைபவம் கூடும். விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். நீண்ட நாட்களாக உங்களை வாட்டி வதைத்த நிதி சிக்கல்கள் இப்பொழுது தீரும்.
தனுசு (Sagittarius Zodiac Sign):
சூரியனின் பெயர்ச்சி அதாவது ராசி மாற்றத்தால் தனுசு ராசிக்காரர்களுக்கு அற்புதமான பலனைத் தரும். ஏனெனில் இந்தப் பெயர்ச்சி தனுசு ராசியிலிருந்து நான்காம் வீட்டில் நடக்கப் போகிறது. எனவே, இந்த நேரத்தில் பொருள் இன்பங்கள் வந்து சேரும். வாகனம் மற்றும் சொத்து போன்றவற்றை வாங்கலாம். வங்கி இருப்பு முன்பை விட அதிகரிக்கும். தொழிலில் பல நல்ல வாய்ப்புகளைப் பெறலாம். தாயுடனான உறவில் இனிமை இருக்கும். நிதிநிலை நன்றாக இருக்கும். வணிகம் செய்பவர்கள் நல்ல லாபத்தை ஈட்டலாம்.