விராட் கோலிக்கே ஆப்பு வைத்த சென்னை சேப்பாக்கம்.. உண்மையை உடைத்த ஹர்பஜன் சிங்
2024 ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் தங்களின் முதல் போட்டியில் மோத உள்ளன. இந்த முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த நிலையில், விராட் கோலி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் அதிக ரன்கள் குவித்தது இல்லை என் ஹர்பஜன் சிங் கூறி இருக்கிறார்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டன் பதவியை விட்டு விலகினாலும் விராட் கோலி அந்த அணியின் முக்கிய வீரராக செயல்பட்டு வருகிறார். ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த வீரர் விராட் கோலி தான். 237 போட்டிகளில் 7263 ரன்கள் குவித்து இருக்கிறார். அவரது பேட்டிங் சராசரி 37.25 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 130 ஆகும்.
ஆனால், இதே விராட் கோலியின் சென்னை சேப்பாக்கம் மைதான புள்ளி விவரத்தை பார்த்தால் மிகவும் சராசரியாகவே உள்ளது. சேப்பாக்கத்தில் கோலியின் பேட்டிங் சராசரி 30 ஆகவும், ஸ்ட்ரைக் ரேட் 111 ஆகவும் உள்ளது. இதன் மூலம் விராட் கோலியின் உயர்வு சென்னை சேப்பாக்கத்தில் சரிந்து இருப்பதாக ஹர்பஜன் சிங் வெளிப்படையாக கூறி இருக்கிறார். மேலும், சிஎஸ்கே அணி சென்னை சேப்பாக்கத்தில் சிறப்பாக செயல்பட ரவீந்திர ஜடேஜாவும் ஒரு முக்கிய காரணம் என ஹர்பஜன் சிங் கூறி இருக்கிறார்.
“சேப்பாக்கத்தில் அவரது ஒட்டுமொத்த ஆட்டத்தின் அடிப்படையில் விராட்டின் மகத்துவம் குறைக்கப்பட்டுள்ளது. பேட்டிங் செய்ய சென்னை சேப்பாக்கம் தந்திரமான இடமாகும், குறிப்பாக ஒரு வகையான வித்தியாசமான டென்னிஸ் பந்து வகை பவுன்ஸ்க்கு எதிராக தொடக்க பேட்ஸ்மேன் சமாளித்து ஆட வேண்டும். ஸ்டம்ப் முதல் ஸ்டம்ப் வரை வீசும் சிறந்த பந்துவீச்சாளரான ரவீந்திர ஜடேஜாவை சிஎஸ்கே அணி வைத்துள்ளனர். ஒற்றைப் பந்தைத் திருப்பவும், பின் ஒற்றைப் பந்தைத் தாழ்வாகவும் அவர் வீசுவார். இது மிகவும் தந்திரமானது” என ஹர்பஜன் சிங் கூறினார்.
ஹர்பஜன் சிங்கின் இந்த பேச்சால் 2024 ஐபிஎல் தொடரின் முதல் போட்டியிலேயே விராட் கோலி இந்த பிம்பத்தை உடைத்து சேப்பாக்கம் மைதானத்தில் ரன் குவிப்பாரா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.