எதிர்பார்க்காத ட்விஸ்ட்.. யாரும் நினைக்காததை செய்த ஆஸ்திரேலிய வீரர்.. கதிலங்கிய நியூசிலாந்து
யாரும் எதிர்பாக்காத விஷயத்தை செய்து நியூசிலாந்து அணியை இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வீழ்த்தி இருக்கிறது ஆஸ்திரேலிய அணி.
நியூசிலாந்து – ஆஸ்திரேலியா அணிகள் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றன. முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்ற நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இரண்டு அணிகளும் மோதின. நியூசிலாந்து அணி இந்தப் போட்டியில் வென்று தொடரை சமன் செய்ய வேண்டும் என்ற முடிவில் இருந்தது.
முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி 162 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஆஸ்திரேலிய அணி 256 ரன்கள் குவித்தது. பின்தங்கிய நிலையில் தன் இரண்டாவது இன்னிங்க்ஸ் ஆடிய நியூசிலாந்து அணி 372 ரன்கள் சேர்த்து, ஆஸ்திரேலிய அணிக்கு 279 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்தது.
இந்த இலக்கை நோக்கி ஆடிய ஆஸ்திரேலிய அணி ஒரு கட்டத்தில் 34 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்து இருந்தது. எப்படியும் நியூசிலாந்து அணி வெற்றி பெறும் என்றே பலரும் கணித்து இருந்த நிலையில், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் மிட்செல் மார்ஷ் மற்றும் அலெக்ஸ் கேரி போட்டியை மாற்றினர்.
மார்ஷ் 80 ரன்கள் சேர்த்து வெளியேறினார். அப்போது அலெக்ஸ் கேரி அரைசதம் கடந்த நிலையில் களத்தில் இருந்தார். அடுத்து வந்த மிட்செல் ஸ்டார்க் டக் அவுட் ஆனார். அதன் பின் கேப்டன் பாட் கம்மின்ஸ் களமிறங்கினார். அவர் பொறுப்பாக பேட்டிங் செய்து 44 பந்துகளில் 32 ரன்கள் சேர்த்தார். கடைசி வரை ஆட்டமிழக்காத அலெக்ஸ் கேரி 98 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் அணியின் வெற்றியை உறுதி செய்தார்.
நியூசிலாந்து அணி எப்படியும் வெற்றி பெற்று விடலாம் என நினைத்து பின்னர் அலெக்ஸ் கேரியின் ஆட்டத்தால் தோல்வியை சந்தித்தது. இதன் மூலம் ஆஸ்திரேலிய 279 ரன்கள் வெற்றி இலக்கை எட்டி ஆஸ்திரேலியா வெற்றி பெற்று, தொடரை 2 – 0 என்ற அளவில் கைப்பற்றியது. நியூசிலாந்து அணியின் சியர்ஸ் 4 விக்கெட், மாட் ஹென்றி 2 விக்கெட் வீழ்த்திய போதும் கடைசி நேரத்தில் அவர்களால் விக்கெட் வீழ்த்த ,முடியாமல் போனது.