நம்பவே முடியல! விலை வெறும் ரூ.7,999 தானா! Magic Ring டிஸ்பிளே, 8GB ரேம், 5000mAh பேட்டரினு மெர்சலா இருக்கு!
சூப்பர் பட்ஜெட் விலையில்.. இன்னும் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் ரூ.8000 க்குள் ஒரு நல்ல ஸ்மார்ட்போனை வாங்க வேண்டும் என்கிற ஐடியா உங்களிடம் இருந்தால்..
விலையை மீறிய அம்சங்களுடன் வெறும் ரூ.7,999 க்கு அறிமுகம் செய்யப்படவுள்ள இந்த ஸ்மார்ட்போன் உங்களுக்கானதாக இருக்கலாம்!
நாம் இங்கே பேசுவது இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 8 (Infinix Smart 8) ஸ்மார்ட்போனை பற்றித்தான். சமீபத்தில் நைஜீரியாவில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த ஸ்மார்ட்போன் கூடிய விரைவில் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படவுள்ளது. எப்போது அறிமுகம்? என்ன விலை? என்னென்ன அம்சங்கள்? இதோ விவரங்கள்:
இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 8 என்னென்ன அம்சங்களை பேக் செய்யும்? இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 8 ஸ்மார்ட்போனின் இந்தியன் வேரியண்ட்டில் ரிங் எல்இடி லைட் யூனிட் (Ring LED Light Unit) உடனான டூயல் ரியர் கேமரா செட்டப் (Dual Rear Camera Setup) உறுதி செய்யப்பட்டுள்ளது அதில் 50 மெகாபிக்சல் மெயின் கேமரா + ஏஐ அசிஸ்டெட் சென்சார் (AI-assisted sensor) இடம்பெறும்.
முன்பக்கத்தில், எல்இடி ப்ளாஷ் உடனான 8 மெகாபிக்சல் செல்பீ கேமரா இருக்கும். இந்த ஸ்மார்ட்போன் மேஜிக் ரிங் (Magic Ring) அம்சத்துடன் வரும். மேஜிக் ரிங் என்பது ஆப்பிள் ஐபோன்களில் (Apple iPhone) உள்ள டைனமிக் ஐலேண்ட்டை (Dynamic Island) போன்ற அம்சமாகும். அறியாதோர்களுக்கு இது நோட்டிஃபிகேஷன்கள் (Notifications) மற்றும் பிற தொடர்புடைய அலெர்ட்களை (Alerts) டிஸ்பிளேவின் மேல்பக்கத்தில் காட்டும் ஒரு அம்சமாகும்.
இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 8 ஸ்மார்ட்போனின் மற்ற அம்சங்கள் க்ளோபல் வேரியண்ட் (Global Variant) உடன் ஒற்றுப்போகும். அதாவது இது 1,612 x 720 பிக்சல்ஸ் ரெசல்யூஷன், 90ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (90Hz Refresh Rate) மற்றும் 500 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் (500 nits Peak Brightness) உடனான 6.6-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளேவை கொண்டிருக்கும்.
இந்த ஸ்மார்ட்போன் 4ஜிபி வரையிலான ரேம், 256ஜிபி வரையிலான ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்ட ஆக்டா-கோர் யூனிசோக் டி606 சிப்செட்டை (Octa-core Unisoc T606 SoC) பேக் செய்யும். கூடுதலாக இந்த ஸ்மார்ட்போனில் 4ஜிபி விர்ச்சுவல் ரேமும் (4GB Virtual RAM) கிடைக்கும். இதன் வழியாக ஸ்மார்ட்போனின் மொத்த ரேம்-ஐ 8ஜிபி ஆக அதிகரிக்க முடியும் மற்றும் மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக இன்டர்னல் ஸ்டோரேஜையும் நீட்டிக்க முடியும்.
ஆண்ட்ராய்டு 13 (Android 13) அடிப்படையிலான எக்ஸ்ஓஎஸ் 13 (XOS 13) உடன் இயங்கும் இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 8 ஸ்மார்ட்போனானது 5000mAh பேட்டரியை கொண்டுள்ளது. இது யூஎஸ்பி டைப்-சி போர்ட் வழியாக 10W வயர்டு சார்ஜிங்கை (Wired Charging) ஆதரிக்கிறது. இந்தியாவில் இது பிளாக், கோல்ட் மற்றும் ஒயிட் கலர் ஆப்ஷன்களில் அறிமுகமாகும்.
இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 8 என்ன விலைக்கு வரும்? இந்தியாவில் இது ரூ.7,999 க்கு அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நினைவூட்டும் வண்ணம் மிகவும் சமீபத்தில் தான் இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 8 எச்டி (Infinix Smart 8 HD) மாடல் இந்தியாவில் அறிமுகமானது. இந்த ஸ்மார்ட்போனின் 3ஜிபி ரேம் + 64ஜிபி ஆப்ஷன் ரூ.6,299 க்கு வாங்க கிடைக்கிறது.
இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 8 எப்போது அறிமுகமாகும்? இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 8 ஸ்மார்ட்போனின் டிசைன் மற்றும் கலர் ஆப்ஷன்களை வெளிப்படுத்தும் டீசரில், இது கூடிய விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று இன்பினிக்ஸ் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. இருப்பினும் சரியான வெளியீட்டு தேதி (Launch Date) இன்னும் அறிவிக்கப்படவில்லை. அறிமுக தேதி குறித்த சரியான தகவல் கிடைத்ததும், அதை உடனுக்குடன் அப்டேட் செய்கிறோம்.