India vs England 5th Test Match: சுனில் கவாஸ்கருக்கு அற்புதமாக பதிலளித்த ரவிச்சந்திரன் அஸ்வின்!

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 5ஆவது டெஸ்ட் போட்டி தரம்சாலாவில் நடைபெற்றது. இந்தப் போட்டியின் மூலமாக தனது 100ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடிய ரவிச்சந்திரன் அஸ்வின் முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளும், 2ஆவது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளும் கைப்பற்றி அசத்தினார். இந்தப் போட்டியில் இந்திய அணி 64 ரன்கள் மற்றும் இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த நிலையில் தான் இந்தப் போட்டிக்கு முன்னதாக இங்கிலாந்து வீரர் ஜோ ரூட், அஸ்வின் குறித்து கருத்து தெரிவித்திருந்தார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்கள் கூட அஸ்வினை சமாளிப்பது கடினம். ஒவ்வொரு போட்டியிலும் பலவிதமான டெலிவரிகள் மூலம் நீங்கள் எப்படி சிறப்பாக செயல்பட முயற்சிக்கிறீர்கள். வெவ்வேறு விதமான டெலிவரி, வித்தியாசமான செயல்கள், வித்தியாசமான ரன் அப்ஸ் என்று எல்லாமே பார்ப்பதற்கு சுவாரஸ்யமாக இருக்கிறது.

உங்களது சிறப்பான ஸ்பின் பந்து வீச்சில் பேட்ஸ்மேன்கள் எல்லோரும் உங்களை சமாளிப்பதற்கு ஒரு முறைக்கு 100 முறை யோசிப்பார்கள் என்று தான் என்னால் சொல்ல முடியும் என்று ஜோ ரூட் கூறினார். இதனை இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் ஜியோ சினிமா நிகழ்ச்சியின் போது பகிர்ந்து கொண்டார்.

இதற்கு பதிலளித்த அஸ்வின் கூறியிருப்பதாவது: சன்னி பாய், வீடியோ ஆய்வாளர்களிடமிருந்து நீங்கள் பெறும் காட்சிகளின் எண்ணிக்கை மற்றும் சிறந்த டெஸ்ட் போட்டிகளில் எப்படி விளையாடுகிறீர்கள் என்பதை நான் உணர்ந்தேன். ஒரே பவுலர்கள் பந்து வீசும் போது பேட்ஸ்மேன்கள் சிறப்பாக செயல்படுவார்கள்.

குட் லெந்தில் பந்து வீசுவது போதுமானதாக இருக்காது. நல்லவேலையாக எனக்கு எனன் வேலை என்று பரிசோதனை செய்து கற்றுக்கொண்டவர்களின் நானும் ஒருவன். இருப்பினும் அனைத்து அனாலிசிஸ் மற்றும் வீடியோ காட்சிகள் ஏராளமாக உள்ளன. இவற்றின் மூலமாக நீங்கள் ஏராளமானவற்றை கற்றுக் கொள்வதன் மூலமாக உங்களால் டாப்பில் வர முடியும் என்று அஸ்வின் கூறியுள்ளார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *