ஆல்ப்ஸ் மலையில் மலையேற்றத்துக்குச் சென்ற சுவிஸ் நாட்டவர்களுக்கு ஏற்பட்ட துயரம்
சுவிஸ் நாட்டவர்கள் சிலர் ஆல்ப்ஸ் மலையில் மலையேற்றத்துக்குச் சென்ற நிலையில் மாயமானார்கள். இந்நிலையில், அவர்களில் ஐந்துபேர் உயிரிழந்துவிட்டதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
மலையேற்றத்துக்குச் சென்றவர்கள்
சுவிஸ் நாட்டவர்கள் ஆறுபேர், வார இறுதியில் ஆல்ப்ஸ் மலையில் மலையேற்றத்துக்குச் சென்றுள்ளார்கள். அவர்கள் மாயமானதாக தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, சனிக்கிழமை அவர்களைத் தேடும் பணி துவங்கியது.
இந்நிலையில், உள்ளூர் நேரப்படி இரவு 9.20 மணியளவில், காணாமல் போனவர்களில் ஐந்து பேர் உயிரற்ற நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாக Valais மாகாண பொலிசார் தெரிவித்துள்ளார்கள். அவர்கள் அனைவரும் சுவிஸ் நாட்டவர்கள் என்றும், 21 முதல் 58 வயது வரையுடையவர்கள் என்றும் பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.
ஆறாவது நபரைக் காணவில்லை. அவரைத் தேடும் பணி தொடர்கிறது.