வெளிநாட்டில் பிரித்தானிய தாயார் கொலையில் புதிய திருப்பம்: இளைஞர் ஒப்புதல்
அவுஸ்திரேலியாவில் பிரித்தானிய தாயாரின் வீடு புகுந்து முன்னெடுக்கப்பட்ட தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய இளைஞர் ஒருவர் கொலைக் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வீடு புகுந்து தாக்குதல்
கடந்த 2022ல் 41 வயதான Emma Lovell என்பவர் வீடு புகுந்து தாக்குதல் நடத்தியவர்களை எதிர்கொண்ட நிலையில் கத்தியால் குத்தப்பட்டார். 2022ல் பிரித்தானியாவில் இருந்து குடும்பத்துடன் பிரிஸ்பேன் பகுதியில் குடும்பத்துடன் குடியேறியுள்ளார் Emma Lovell.
இந்த நிலையில் அவரது குடியிருப்புக்குள் அத்துமீறிய இரு இளைஞர்கள் மீது நான்கு பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டது. சம்பவத்தின் போது அவர்கள் 17 வயதுடையவர்கள் என்பதால் பெயர் உள்ளிட்ட தகவலேதும் சட்ட காரணங்களுக்காக வெளியிடப்படவில்லை.
இதனிடையே, திங்களன்று பிரிஸ்பேன் உச்ச நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில், சம்பவத்தின் போது கத்தியை பயன்படுத்திய இளைஞரே கொலைக் குற்றவாளி என்றும் உறுதி செய்யப்பட, அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.
குற்றத்தை ஒப்புக்கொள்ளவில்லை
தற்போது 18 வயதாகும் அந்த இளைஞருக்கான தண்டனை மே மாதம் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுவரையில் அவர் பொலிஸ் காவலில் வைக்கப்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தில் ஈடுபட்ட இன்னொரு இளைஞர் இதுவரை குற்றத்தை ஒப்புக்கொள்ளவில்லை என்றே கூறப்படுகிறது. இந்த தாக்குதல் சம்பவம் அப்போது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.