குழந்தைகளின் எதிர்காலத்திற்காக மோடி ஜி மணிப்பூர் வர வேண்டும் – MFN சாம்பியன் சுங்ரெங் கொரென் வேண்டுகோள்!

மணிப்பூரைச் சேர்ந்தவரான கலப்பு தற்காப்பு வீரரான சுங்ரெங் கோரென், மேட்ரிக்ஸ் ஃபைட் (MFN) நைட்டின் புதிய இடைக்கால பாண்டம்வெயிட் சாம்பியன் பட்டம் வென்றார். உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டா உள்விளையாட்டு அரங்கத்தில் நடந்த MFN 14 பாண்டம்வெயிட் பிரிவு புதிய இடைக்கால சாம்பியனுக்கான போட்டியில் அறிமுக வீரர் முகமது ஃபர்ஹாத் இடைக்கால பட்டத்திற்காக சுங்ரெங் கோரனை எதிர்த்து போட்டியிட்டார்.

நடப்பு பாண்டம்வெயிட் சாம்பியனான உலூமி கரீமை எதிர்த்து நாக் அவுட் சுற்றில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நிலையில் இடைக்கால சாம்பியனுக்கான போட்டியில் மணிப்பூர் வீரரான சுங்ரெங் கோரெனை எதிர்த்து போட்டியிட்டார். இதில் பலம் வாய்ந்த் சுங்ரெங் கொரெனின் இடைவிடாத தாக்குதலை சமாளிக்க முடியாமல் ஃபர்ஹாத் திணறினார்.

தொடர்ந்து 4ஆவது சுற்றில் சுங்ரெங்கின் குத்துகளை கொடுக்க நடுவர் தலையிட்டு போட்டியை நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. இறுதியாக சுங்ரெங் கோரென் வெற்றி பெற்று இடைக்கால பாண்டம்வெயிட் சாம்பியன் பட்டம் வென்றார். இதையடுத்து பேசிய சுங்ரெங் கோரென் மணிப்பூர் மாநிலத்தின் அமைத்திக்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுத்தார்.

இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: மணிப்பூரில் வன்முறை நடக்கிறது. கிட்டத்தட்ட ஒரு வருடமாகிறது. வன்முறை கலவரங்களால் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். பலரும் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அங்கு உணவு மற்றும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. குழந்தைகளால் சரியாக படிக்க முடியவில்லை. அவர்களது எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. மணிப்பூர் அமைதிக்காக ஒருமுறை நரேந்திர மோடி ஜி மணிப்பூருக்கு வர வேண்டும் என்று கூறியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *