பிறந்து 2 வாரங்களேயான குழந்தையை கொன்றதாக கைதான பிரித்தானிய தம்பதி
பிரித்தானியாவில் பிறந்து இரண்டு வாரங்களே ஆன குழந்தையை கொன்றதாக, அதன் பெற்றோர் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியளித்தது.
2 வார குழந்தை
பிரித்தானியாவின் சோமர்செட் நகரில் அமைத்துள்ள Yevoil மாவட்ட வைத்தியசாலை. இங்கு கடந்த 5ஆம் திகதி, பிறந்து 2 வாரங்களேயான குழந்தை ஒன்று அதன் பெற்றோர்களால் கொல்லப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டது.
அதன்படி Daniel Gunter (25), Sophie Staddon (20) என்ற தம்பதி கைது செய்யப்பட்டனர். முகவரி இல்லாத இருவரும் குழந்தையின் மரணத்திற்கு காரணமாக அல்லது இறப்புக்கு வழிவகுத்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளனர்.
பிரிஸ்டல் கிரவுன் நீதிமன்றத்தில் நடந்த குறுகிய விசாரணையில் குற்றம்சாட்டப்பட்ட தம்பதிக்கு விலக்கு அளிக்கப்பட்டது.
விசாரணை
வழக்கு விசாரணையின்போது, மண்டை ஓட்டில் குறிப்பிடத்தக்க எலும்பு முறிவு காரணமாக குழந்தை இறந்ததற்கான ஆரம்ப அறிகுறிகள் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டன.
இதற்கிடையில், குழந்தைக்கு பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ள நிலையில், குறித்த தம்பதி பிணைக்கு விண்ணப்பிக்கவில்லை என்று தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில் பிரதிவாதிகளை காவலில் வைக்க உத்தரவிட்ட நீதிபதி, ஏப்ரல் 5ஆம் திகதி விசாரணைக்கு தயாராவது மற்றும் முன் விசாரணையை நிர்ணயித்தார்.
குற்றப் புலனாய்வுக் குழு விசாரணையை தொடங்கியுள்ளதாகவும், ஊழியர்கள் மூலம் அதிகாரிகள் வைத்தியசாலைக்கு அழைக்கப்பட்டதாகவும் அவோன் மற்றும் சோமர்செட் பொலிஸார் முன்னர் தெரிவித்தனர்.