இளம் வயதில் அதிகரிக்கும் மாரடைப்பு மரணங்கள்… காரணம் என்ன?
இன்றைய காலத்தில் இளம் வயதில் மாரடைப்பும், இதனால் ஏற்படும் மரணங்களும் அதிகரித்து வரும் நிலையில், இதற்கான காரணத்தை தெரிந்து கொள்வோம்.
மாரடைப்பு
இன்று பெரும்பாலான நபர்களுக்கு இதய பிரச்சினை ஏற்படுகின்றது. இவை எதிர்பாராத தருணத்தில் மாரடைப்பில் கொண்டு வந்து விடுவதுடன் உயிரிழப்பும் ஏற்படுகின்றது. அதிலும் இளைஞர்கள் அதிகமாகவே மாரடைப்பினால் உயிரிழக்கின்றனர்.
இதற்கு மாறிவரும் வாழ்க்கைத் தரம் மற்றும் உணவு உட்கொள்ளும் மாற்றங்கள் தான் காரணம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
நல்ல வாழ்க்கை முறை மூலம் இதய நோய்கள், சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் போன்ற நோய்களை 80 சதவீதத்துக்கும் மேல் குறைக்கலாம் என்று கூறப்படுகிறது.
வராமல் தடுப்பது எப்படி?
பூஜ்ஜிய சர்க்கரையுடன் ஒரு சீரான உணவு பரிந்துரைக்கப்படுகிறது. கோதுமையின் பயன்பாட்டைக் குறைத்து, தினை, உளுந்து, சோளம், உளுந்து, ராகி, சோயாபீன்ஸ் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். மேலும் அதிக புரதம் மற்றும் குறைந்த அளவு எண்ணெய் மற்றும் நெய் எடுத்துக் கொள்வதற்கு அறிவுறுத்தப்படுகின்றது.
மேலும் உடற்பயிற்சி முக்கியமாக பரிந்துரைக்கப்படுகின்றது. தினமும் 10 ஆயிரம் படிகள் நடக்க வேண்டும் என்றும், உட்காரும் நேரத்தினை 50 சதவீதம் குறைத்தால் நோய்களையும் 50 சதவீதம் குறைக்கலாம் என்றும் முடிந்தவரை இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை எழுந்து நடக்க பரிந்துரைக்கப்படுகிறது.
மேலும், தசைகள் வலுவாக இருக்க புஷ் அப்ஸ், பளு தூக்குதல் போன்ற சில பயிற்சிகள் அவசியம் என்று கூறப்படுகிறது.
மன அழுத்தத்தைக் குறைக்கும் யோகா, தியானம் போன்றவற்றைப் பயிற்சி செய்ய பரிந்துரைக்கப்படுகிறது.
புகைபிடித்தல் மற்றும் மது அருந்துவதையும் தவிர்ப்பதுடன், ஸ்மார்ட் போன், லேப்டாப் போன்ற கேஜெட்களில் செலவிடும் நேரத்தையும் குறைக்க வேண்டும்.