பிரியா படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்த நடிகையா இது?- வைரல் புகைப்படம்
ரஜினியின் நடிப்பில் 1947ஆம் ஆண்டு தமிழ் மற்றும் கன்னடத்தில் வெளியான திரைப்படம் பிரியா.
இப்படத்தில், ரஜினிகாந்த், ஸ்ரீதேவி, அஸ்னாஹமீத், மேஜர் சுந்தர்ராஜன், தேங்காய் சீனிவாசன் நடித்திருந்தனர்.
இப்படத்தில் “என்னுயிர் நீதானே” மற்றும் “அக்கரை சீமை அழகினிலே” உள்ளிட்ட பாடல்கள் இன்றளவும் ரசிகர்களை மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும்.
இப்படத்தின் நடிகை அஸ்னாஹமீத், ப்ரியா திரைப்படத்தில் சுபத்ரா கதாபாத்திரத்தில் மலாய் இந்திய பெண்ணாக நடித்திருப்பார்.
சுபத்ரா கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் பெரிதளவில் இடம்பிடித்தார் நடிகை அஸ்னாஹமத்.
70 வயதாகும் நடிகை அஸ்னா ஹமீத் தற்போது ட்ராமாக்களில் நடித்து வருவதாக கூறுகின்றனர்.
இந்நிலையில் நடிகை அஸ்னா ஹமத்தாவின் சமீபத்திய புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.