Daily Rasi Palan | இன்றைய ராசி பலன் – மார்ச் 12, 2024 – செவ்வாய்க்கிழமை
மேஷம்:
இன்று உங்களுக்கு கிடைக்கும் ஒரு புதிய தொடர்பு உங்கள் வாழ்க்கையின் பாதையை முற்றிலும் மாற்றக்கூடும். உங்கள் இதயம் சொல்வதை இன்று பின்பற்றுங்கள், வெற்றி கிடைக்கும். உங்களின் நலம் விரும்பிகள் மற்றும் வழிகாட்டிகளிடம் ஆலோசனை பெறுவது நன்மைகளை அளிக்கும். இன்று கிடைக்கும் புதிய வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வது உங்கள் நிதி நிலையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
ரிஷபம்:
உங்கள் காதல் கோரிக்கை இன்று நிறைவேறலாம். நீங்கள் ஆர்வமுடன் செயல்படுவது உங்களின் வெற்றி வாய்ப்பை பிரகாசமாக்கும். வணிகர்கள் தங்கள் தொழிலுக்கு முன்னெப்போதையும் விட அதிக முக்கியத்துவம் இன்று கொடுக்க வேண்டியதிருக்கலாம்.இன்று உங்கள் நிதி நிலை சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தை கவனித்து கொள்வது மன அமைதியை அளிக்கும்.
மிதுனம்:
உங்கள் வழியில் இன்று கிடைக்கும் புதிய வாய்ப்புகளை தயங்காமல் ஏற்று கொள்ளுங்கள். உங்கள் உள்ளுணர்வு திருப்திகரமான உறவுக்கு உங்களை அழைத்துச் செல்லும். பணியிடத்தில் உங்களின் திறமை வெளிப்படும் , இதனால் உங்களது பொருளாதார நிலையை செழிப்பாக்க கூடிய சலுகைகள் வழங்கப்படலாம். வரவு ஒருபக்கம் இருந்தாலும் செலவுகளில் கவனம் இருக்க வேண்டும்.
கடகம்:
உங்கள் காதல் வாழ்க்கையில் இன்று நீங்கள் ஒரு முக்கியமான முடிவை எடுக்க வேண்டிய சூழல் ஏற்படும். இன்று நீங்கள் வெளிப்படுத்தும் கடின உழைப்பின் பலனை எதிர்காலத்தில் நீங்கள் லாபமாக எதிர்பார்க்கலாம். புதிய திட்டங்களில் முழு கவனம் செலுத்துவது உங்களின் வளர்ச்சி வாய்ப்பை அதிகரிக்க செய்யும். இன்று நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க சில மணிநேரங்கள் உங்களுக்கென ஒதுக்குங்கள்.
சிம்மம்:
காதல் உறவை எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கு இன்று புதிய வாய்ப்பு நெருங்கி வரலாம். இன்று உங்களுக்குளே எழும் புதிய ஆற்றலை நீங்கள் அப்படியே ஏற்று கொண்டு உங்களின் வளர்ச்சிக்கு பயன்படுத்தலாம். உங்களுக்கு மகிழ்ச்சியை தருவதைச் செய்வதில் கவனம் செலுத்தலாம். இன்று உங்களுக்கு நிதி ஆதாயத்திற்கான வாய்ப்பு இருக்கலாம். சுய கவனிப்பில் கவனம் செலுத்துவதன் மூலம் உங்கள் தேவைகளை கவனத்தில் கொள்ளுங்கள்.
கன்னி:
உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சி மற்றும் திருப்தியை ஏற்படுத்தும் திறன் கொண்ட ஒரு புதிய நபரால் இன்று நீங்கள் ஈர்க்கப்படலாம். நீங்கள் ஏற்கனவே உறவில் இருப்பவர் என்றால் வெளிப்படையான தகவல் தொடர்பு மற்றும் நேர்மைக்கு இன்று முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இன்று அவசரமாக முடிவெடுப்பதைத் தவிர்க்கவும். உங்கள் வருமானம் உயரலாம் அல்லது சில புதிய நிதி வாய்ப்புகளைப் பெறலாம்.
துலாம்:
காதல் உறவில் இருப்பவர்கள் மற்றும் திருமணமானவர்கள் இன்று கவனமாக செயல்படாவிட்டால் சண்டை சச்சரவுகள் ஏற்படலாம். இன்று நீங்கள் பொறுமை மற்றும் விடாமுயற்சியுடன் இருக்க வேண்டும். சில தடைகள் மற்றும் சவால்களை எதிர்கொண்டாலும் உங்கள் நோக்கங்களில் உறுதியாக இருங்கள். உங்கள் சொந்த திறன்கள் மீது மிகுந்த நம்பிக்கை வைக்க வேண்டிய நாள்.
விருச்சிகம்:
உங்கள் காதல் வாழ்க்கையில் இன்று சில ஏற்ற தாழ்வுகளை சந்திக்கலாம். இன்று சில சவால்களை எதிர்கொண்டாலும் பொறுமையை கடைபிடிப்பது அவற்றை எளிதாக கடக்க உதவும். தேவையற்ற அல்லது ஆடம்பர பொருட்களுக்காக செலவு செய்வதைத் தவிர்த்து, நிதி சேமிப்பை கருத்தில் கொள்ளுங்கள். புதிய இடங்களுக்கு பயணம் செய்வது உங்களுக்கு சாகச அனுபவங்களை ஏற்படுத்தும்.
தனுசு:
இன்று உங்களுக்கு கிடைக்கும் புதிய அனுபவங்கள் உங்களின் தனிப்பட்ட வளர்ச்சிக்கு வழிவகுக்கும். வளர்ச்சிக்கான வாய்ப்புகள் நீங்கள் எதிர்பார்த்ததை விட சிறப்பானதாக இருக்கும். உங்கள் துணையுடனான பிணைப்பு வலுவாகும். பணியிடத்தில் ஊழியர்களே உங்கள் மீது பொறாமை கொள்ளலாம். இன்று நீங்கள் உங்களின் சுய பாதுகாப்பு மற்றும் உணர்ச்சி தேவைகளில் கவனம் செலுத்த வேண்டும்.
மகரம்:
உங்கள் வாழ்க்கையில் வெற்றிகரமான விஷயங்களை செய்து பார்ப்பதற்கான வாய்ப்புகள் அமையலாம். உங்களுக்கான அங்கீகாரம் கிடைக்கலாம் அல்லது சற்றும் எதிர்பாராத வாய்ப்பு வழங்கப்படலாம். இதனால் உங்களின் பொருளாதார நிலை வலுவாக கூடும். தவறான தகவல்தொடர்புகள் நஷ்டத்தை ஏற்படுத்த கூடும் என்பதால் கவனம் தேவை.
கும்பம்:
உறவில் இருபவர்களுக்குள் தொடர்பு வலுவடைவதோடு, ஆழ்ந்த அர்ப்பணிப்பு உணர்வும் வெளிப்படும். இதனால் ஒரு அழகான மற்றும் அமைதியான நாளாக இருக்கும். பார்ட்னர்ஷிப் சேர்ந்து பிசினஸ் செய்பவர்கள் இன்று சில கடினமான முடிவை எடுக்க நேரிடலாம். குறித்த நேரத்தில் முடிக்க திட்டமிட்ட விஷயங்களில் இன்று எதிர்பாராத தாமதங்கள் ஏற்படலாம்.
மீனம்:
உறவுகளுக்குள் இருந்து வரும் சில தவறான புரிதல்கள் அல்லது கருத்து வேறுபாடுகளை சரி செய்ய நினைப்பவர்கள் இன்று வெளிப்படையாக பேசி பிரச்சனைகளை தீர்த்து கொள்ளலாம். வணிகர்களுக்கு இன்று தங்கள் தொழிலை விரிவுப்படுத்துவதற்கான வாய்புகள் கிடைக்கலாம். எதிலும் பொறுமையாக மற்றும் புத்திசாலித்தனமாக செயல்படுவது எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய பின்னடைவுகள் அல்லது சிக்கல்களில் இருந்து உங்களை காப்பாற்றும்.