டீ தூள் வைத்து அடர்த்தியான தலைமுடியை பெறலாமா..? சூப்பரான டிப்ஸ்..!

தலைமுடி உதிர்வதை தவிர்த்து நீளமான, அடர்த்தியான மற்றும் கருமையான தலைமுடியை இயற்கை வைத்தியங்கள் மூலமாக பெற வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் உங்களுக்கு தேநீர் அற்புதமான ஒரு தீர்வாக அமைகிறது.

தேநீர் வைத்து தலை முடியை கழுவுவது என்பது பாரம்பரிய ஒரு நடைமுறையாக பின்பற்றப்பட்டு வருகிறது. தலைமுடியை வலுவாக்குவதற்கும், ஆரோக்கியமாக்குவதற்கும் தேநீர் எவ்வாறு உதவுகிறது என்பதை முதலில் தெரிந்து கொள்ளலாம்.

பிளாக் டீ, கிரீன் டீ அல்லது ஹெர்பல் டீ எதுவாக இருந்தாலும் அவற்றில் பயோ ஆக்டிவ் காம்பவுண்ட்ஸ் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்ஸ் நிறைந்துள்ளன. பாலிபீனால்கள் மற்றும் கேட்டசின்கள் போன்ற காம்பவுண்ட்ஸ் ஆக்சிடேட்டிவ் அழுத்தத்தையும், அழற்சியையும் எதிர்த்து போராடி தலைமுடி உதிர்வதை தவிர்க்கிறது. கூடுதலாக தேநீரில் காணப்படும் வைட்டமின் E மற்றும் இரும்புச்சத்து போன்ற வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் ஆரோக்கியமான தலைமுடி வளர்ச்சியை பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

தேநீரில் பல்வேறு வகையான காஃபைன்கள் பல்வேறு அளவுகளில் காணப்படுகிறது. இது மயிர் கால்களை வலுவாக்கி தலைமுடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. தேநீரை கொண்டு தலைமுடியை கழுவும் பொழுது காஃபைன் மயிர்கால்கள் வழியாக ஊடுருவி, ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. இதனால் முடி உதிர்வு குறைகிறது.

கிரீன் டீ போன்ற ஒரு சில வகை தேநீரில் உள்ள காம்பவுண்ட்ஸ் தலைமுடி உதிர்வதற்கு காரணமான DHT உற்பத்தியை தடுக்கிறது. எனவே உங்களது அன்றாட தலைமுடி பராமரிப்பு வழக்கத்தில் தேநீரை பயன்படுத்துவதன் மூலமாக நாளடைவில் உங்களுக்கு முடி உதிர்வது குறைகிறது.

தேநீர் தலைமுடியில் கண்டிஷனிங் விளைவை தரக்கூடியதாக அமைந்து முடி உடைந்து போவதை தடுக்கிறது. தேநீரில் காணப்படும் டானின்கள் தலைமுடியில் ஒரு பாதுகாப்பு அடுக்கை உருவாக்கி அதன் வலிமையை மேம்படுத்தி, சேதத்தை குறைக்கிறது.

தேநீரில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் இருப்பதால் மயிர் கால்களில் ஏற்படக்கூடிய அழற்சி தடுக்கப்பட்டு, அதனால் முடி உதிர்வு குறைகிறது. பொதுவாக மயிர் கால்களில் ஏற்படும் வீக்கம் மற்றும் பொடுகு ஆகியவை ஆரோக்கியமான தலைமுடி வளர்ச்சியை தடுக்கிறது. இது தேனீர் மூலமாக சரி செய்யப்படுகிறது.

உங்களுடைய தலைமுடி பராமரிப்பு வழக்கத்தில் தேநீரை பயன்படுத்துவது எப்படி?

முதலில் உங்களுக்கு விருப்பமான தேநீரை தயாரித்துக் கொள்ளுங்கள். பிளாக் டீ, கிரீன் டீ மற்றும் சாமந்திப்பூ தேநீர் போன்ற மூலிகை டீ வகைகளாக கூட அது இருக்கலாம். டீ தயாரித்த பிறகு அதனை அறை வெப்ப நிலைக்கு குளிர வைக்கவும். உங்கள் தலைமுடியில் சூடான தேநீரை ஒருபோதும் பயன்படுத்தக் கூடாது. அதனால் உங்கள் தலைமுடி அல்லது மயிர் கால்கள் சேதம் அடையலாம்.

முதலில் உங்கள் தலைமுடிக்கு ஷாம்பு பயன்படுத்தவும். அதன் பிறகு இறுதியாக இந்த தேநீர் பயன்படுத்தி தலைமுடியை அலசவும். பொறுமையாக உங்கள் மயிர் கால்களை மசாஜ் செய்து ஒரு சில நிமிடங்கள் அப்படியே விட்டுவிட்டு பிறகு குளிர்ந்த நீரில் கழுவவும்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *