பஜாஜ் சிஎன்ஜி பைக்கின் ஸ்பை படங்கள் வெளியானது
சிஎன்ஜி எரிபொருளில் இயங்கும் உலகின் முதல் மோட்டார்சைக்கிள் மாடலை பஜாஜ் ஆட்டோ தயாரித்து வரும் நிலையில் சாலை சோதனை ஓட்டத்தில் ஈடுபட்டுள்ள படம் மீண்டும் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் பஜாஜ் ஆட்டோ தலைவர் ராஜீவ் பஜாஜ் அளித்த பேட்டியில் சி.என்.ஜி பைக் மாடல் நடப்பு 2024 ஆண்டில் அடுத்த சில மாதங்களுக்குள்ளாகவே வெளியிட உள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.
பஜாஜ் சிஎன்ஜி பைக்
தினசரி பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் கம்யூட்டர் பிரிவில் வரவுள்ள சிஎன்ஜி எரிபொருளுக்கான டேங்கை மிக நேர்த்தியாக இருக்கைக்கு மற்றும் பெட்ரோல் டேங்கின் அடிப்பகுதியில் பொருத்தியிருக்கின்றது. மேலும் மிக நீளமான இருக்கை அமைப்பும் உள்ளதால் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றது.
உற்பத்தி நிலை மாடல் அனேகமாக பிளாட்டினா 110 பைக்கினை போல அமைந்திருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. பொருத்தப்பட்ட உள்ள பெட்ரோல் என்ஜின் மற்றும் சிஎன்ஜி டேங்க் கொள்ளளவு பற்றி எந்த தகவலும் தற்பொழுது வெளியிடப்படவில்லை.
இந்த மாடல் பெட்ரோலில் முழுமையாகவும் அதே போலவே சிஎன்ஜி பயன்முறை என இரண்டிலும் இலகுவாக மாற்றிக் கொண்டு இயங்க உள்ளது.
சோதனை ஓட்டத்தில் உள்ள மாடலில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் ட்வின் ஷாக் அப்சார்பர் கொண்டு முன்புறத்தில் டிஸ்க் மற்றும் டிரம் பிரேக் ஆப்ஷனும் உள்ள நிலையில், டிஜிட்டல் கிளஸ்ட்டர் ஆனது பெற்றுள்ளது.
சிஎன்ஜி மோட்டார்சைக்கிள் ஆனது பெட்ரோல் மாடல்களை விட மிக சிறப்பான மைலேஜ் வழங்கும் என்பதனால் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பினை பெறும் என பஜாஜ் ஆட்டோ எதிர்பார்க்கின்றது.