இந்திய சந்தையில் புதிய பைக்குகளை வெளியிட்ட Ducati.. விற்பனையில் Streetfighter V4 & V4S – விலை என்ன தெரியுமா?
உலக அளவில் புகழ் பெற்ற டுகாட்டி நிறுவனம் தனது ஸ்ட்ரீட்ஃபைட்டர் வி4 மற்றும் ஸ்ட்ரீட்ஃபைட்டர் வி4எஸ் ஆகிய மாடல்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. டுகாட்டி இந்தியா இணையதளத்தில் மார்ச் 12ம் தேதி முதல் அனைத்து டுகாட்டி டீலர்ஷிப்களிலும் விற்பனைக்கு கிடைக்கும் என்றும் அதிர்க்கரபூர்வமாக அறிவித்துள்ளது.
ஸ்ட்ரீட்ஃபைட்டர் V4ன் இந்த சமீபத்திய மாடலானது ஏராளமான நுட்பமான மேம்படுத்தல்களுடன் வருகிறது. இருப்பினும் பழைய மாடலின் கூர்மையான மற்றும் ஸ்போர்ட்டி வடிவமைப்பு இதிலும் தக்கவைக்கப்பட்டுள்ளது. சூப்பர்நேக் செய்யப்பட்ட ஸ்ட்ரீட்ஃபைட்டரின் காட்சி சிறப்பம்சங்கள், ஒரு கூர்மையான LED ஹெட்லைட், பெரிதாக்கப்பட்ட எரிபொருள் தொட்டி ஆகியவை அடங்கும்.
வடிவமைப்பு ஒரே மாதிரியாக இருந்தாலும், டுகாட்டி V4ன் இந்த சமீபத்திய மாடலில் ஒரு பெரிய 17 லிட்டர் எரிபொருள் டேங்க் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. V4 டுகாட்டி சிவப்பு நிறத்தில் விற்பனைக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரம் ஸ்ட்ரீட்ஃபைட்டர் V4S இரண்டு விருப்பங்களில் வருகிறது, ஒன்று கிரே நீரோ மற்றும் டுகாட்டி ரெட்.
நாளை முதல் விற்பனைக்கு வரும் இந்த இரு வண்டிகளும் குறைந்தபட்சம் 24.62 லட்சத்திலிருந்து துவங்கி 28 லட்சம் வரை விற்பனையாக வாய்ப்புள்ளதாக. இந்திய சந்தையில் டுகாட்டி பைக்குகள் அறிமுகம் ஆனதிலிருந்து இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றது என்றே கூறலாம்.