விஜயகாந்தின் கடைசி படம்: ஷூட்டிங் காட்சி வைரல்
விஜயகாந்த் இன்று (டிச.28) காலமானதையடுத்து, சமூக வலைதளங்களில் பழம்பெரும் நடிகரை ரசிகர்கள் நினைவு கூர்ந்து வருகின்றனர்.
பல த்ரோபேக் வீடியோக்கள் மற்றும் நடிகரின் நினைவுகள் பரவலான கவனத்தை ஈர்த்து வருகின்றன.
அதில் விஜயகாந்தின் கடைசி படப்பிடிப்பு வீடியோ அவற்றில் முக்கியமானது. விஜயகாந்த் நடிப்பில் கடைசியாக வெளியான படம் சகாப்தம். தனது மகன் சண்முக பாண்டியன் கதாநாயகனாக அறிமுகமான படத்தில் சிறப்பு வேடத்தில் நடித்தார்.
கேப்டன் விஜயகாந்த் அவர்கள் கடைசியாக நடித்து பாதியில் நிறுத்தப்பட்ட “தமிழன் என்று சொல்” படப்பிடிப்பு தளம் pic.twitter.com/AN3kx3KAtQ
— Karthik Ravivarma (@Karthikravivarm) December 28, 2023
சகாப்தம்’ படத்திற்கு பிறகு விஜயகாந்த் இரண்டாவது முறையாக சண்முக பாண்டியனுடன் இணையும் படத்திற்கு ‘தமிழன் என்று சொல்’ என்று தலைப்பு வைக்கப்பட்டிருந்தது.
துரதிர்ஷ்டவசமாக விஜயகாந்தின் உடல்நிலை காரணமாக படம் கைவிடப்பட்டது. ஆனால், ‘தமிழன் என்று சொல்’ படத்தில் நடிகர் விஜயகாந்த் ஒரு காட்சியை படமாக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
அந்தக் காட்சியில் அவர் ஷாட் முடிந்ததும் பாராட்டப்படுகிறார். திரைப்பட செட்டில் விஜயகாந்தின் கடைசி நாளைக் காணும் போது ரசிகர்கள் உணர்ச்சிவசப்படுகின்றனர்.
விஜயகாந்த் தனது பொழுதுபோக்கு படங்களுக்காக பிரபலமானவர், மேலும் தைரியமான மற்றும் துணிச்சலான நடிகர் எனப் பெயரெடுத்தவர்.
180 படங்களுக்கு மேல் நடித்துள்ள விஜயகாந்த், தமிழ் தவிர வேறு எந்த மொழியிலும் நடிக்கவில்லை.