பொதுத்தேர்வுக்கான விடைத்தாள்கள் மதிப்பீட்டு பணி – அட்டவணை வெளியீடு!
தமிழகத்தில் கடந்த மார்ச் நான்காம் தேதி 12ஆம் வகுப்பு பொது தேர்வுகள் தொடங்கி நடந்து வருகிறது. பொது தேர்வுகளுக்கான விடைத்தாள்கள் மதிப்பீட்டு பணிகளை எப்போது தொடங்கி எந்த தேதியில் முடிக்க வேண்டும் என பள்ளி கல்வித்துறை கால அட்டவணையை தற்போது வழங்கியுள்ளது.
அதன்படி +1 இல் அரியர் மாணவர்களுக்கு ஏப்ரல் 6 ஆம் தேதி இந்த பணி துவங்க உள்ளது. இந்த நடப்பு கல்வியாண்டு மாணவர்களுக்கு ஏப்ரல் 15ஆம் தேதி மதிப்பீடு தொடங்கி ஏப்ரல் 25 ஆம் தேதி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோல் பிளஸ் 2 மாணவர்களுக்கான விடைத்தாள்களை ஏப்ரல் 1 ல் தொடங்கி 13 ஆம் தேதி முடிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பத்தாம் வகுப்புக்கு ஏப்ரல் 13 தொடங்கி ஏப்ரல் 22 ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.