மக்களுக்கு அடுத்த ஷாக்..! வரும் 25-ம் தேதி முதல் ரேசன் கடைகள் இயங்காது..!
தமிழகம் முழுவதும் சுமார் 32,000 ரேஷன் கடைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இவற்றில் பெரும்பாலான கடைகளில் பெண் பணியாளர்களை பணிபுரிந்து வருகின்றனர். இவ்வாறான நிலையில் மாலை 6 மணிக்கு மேல் ரேஷன் கடை விற்பனையாளர்கள் வீடு, வீடாக சென்று E-KYC விரல் ரேகை பதிவு செய்ய வற்புறுத்தப்படுவதை கண்டித்தும், ஏற்கனவே ஏற்றுக் கொண்டபடி 26 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற கோரியும் தமிழகம் முழுவதும் மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தினர் நேற்று (11-03-2024) கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து மாவட்ட செயலாளர் காமராஜ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், இதற்குப் பிறகும் அரசு எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் வருகிற 25-ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது என கூறினார்.